search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    என்.பி.எல். கிரிக்கெட் லீக் போட்டி - வருகிற 14-ந்தேதி நடக்கிறது
    X

    கோப்புபடம். 

    என்.பி.எல். கிரிக்கெட் லீக் போட்டி - வருகிற 14-ந்தேதி நடக்கிறது

    • மூன்றாவது போட்டியில் எஸ்.என்., எக்ஸ்போர்ட்ஸ் - தங்கமன் அணிகள் மோதின.
    • நான்காவது போட்டியில் டாலர் - சி.ஆர்., டைகர் அணிகள் மோதின.

    திருப்பூர்:

    பின்னலாடை நிறுவன அணிகள் மோதும் என்.பி.எல்., கிரிக்கெட் தொடர் திருப்பூர் முதலிபாளையம் நிப்ட்-டீ கல்லூரி மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. இதில் லீக் போட்டிகள் நடைபெற்றன.

    ஜூபிட்டர் நிட்டிங் கம்பெனி - அமேசிங் எக்ஸ்போர்ட்ஸ் அணிகள் மோதிய போட்டியில் முதலில் களமிறங்கிய ஜூபிட்டர் 15 ஓவரில் 6 விக்கெட் இழந்து 81 ரன் எடுத்தது. தொடர்ந்து ஆடிய அமேசிங் அணி 8 விக்கெட் இழப்புக்கு, 77 ரன்னுடன் தோல்வியடைந்தது. 3 ஓவர் பந்து வீசி 14 ரன் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்திய ஜூபிட்டர் வீரர் செமிகுமார் ஆட்டநாயகனாக தேர்வானார்.

    மற்றொரு போட்டியில் ஸ்ரீவாரி கிளாத்திங் - வார்ஷா இன்டர் நேஷனல் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஸ்ரீவாரி 7 விக்கெட் இழப்புக்கு 112 ரன் குவித்தது.அடுத்து களமிறங்கிய வார்ஷா 13.5 ஓவரில் 48 ரன்னில் ஆட்டமிழந்தது. 3 ஓவர் பந்து வீசி 7 ரன் மட்டும் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்திய ஸ்ரீ வாரி வீரர் பிரபு ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

    மூன்றாவது போட்டியில் எஸ்.என்., எக்ஸ்போர்ட்ஸ் - தங்கமன் அணிகள் மோதின. முதலில் ஆடிய எஸ்.என்., எக்ஸ்போர்ட்ஸ் அதிரடியாக விளையாடி 144 ரன் எடுத்தது.தொடர்ந்து ஆடிய தங்கமன் அணி 6 விக்கெட் இழப்புக்கு 75 ரன்னில் சுருண்டது. தான் எதிர்கொண்ட 28 பந்துக்கு 60 ரன் விளாசிய எஸ்.என்., எக்ஸ்போர்ட்ஸ் வீரர் லிபின் ஜோசப் ஆட்டநாயகனாக தேர்வானார்.

    நான்காவது போட்டியில் டாலர் - சி.ஆர்., டைகர் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த டாலர் அணி, 61 ரன் எடுத்து ஆட்டமிழந்தது. அசால்டாக ஆடிய சி.ஆர்., டைகர் 8.2 ஓவரில் 62 ரன்னுடன் வெற்றிபெற்றது. 3 ஓவர் பந்து வீசி 3பேரை வீழ்த்திய சி.ஆர்., வீரர் சங்கரநாராயணன் ஆட்டநாயகனாக தேர்வானார்.அடுத்த சுற்று லீக் போட்டி வருகிற 14-ந் தேதி நடைபெறுகிறது.

    Next Story
    ×