search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கருணாநிதி பிறந்தநாளையொட்டி கிடாதுறையில் மரக்கன்றுகள் நடும் விழா
    X

    கருணாநிதி பிறந்தநாளையொட்டி மரக்கன்றுகள் நடும்விழா நடைபெற்ற காட்சி. 

    கருணாநிதி பிறந்தநாளையொட்டி கிடாதுறையில் மரக்கன்றுகள் நடும் விழா

    • முத்தமிழ் அறிஞர் பூங்கா வனம் என பெயரிடப்பட்டு பெயர்ப்பலகை திறக்கப்பட்டது.
    • சின்னியம்பாளையம் புதூர் பகுதியில் கொடியேற்றுவிழா நடைபெற்றது.

    மங்கலம்:

    முன்னாள் முதல்-அமைச்சர் மு.கருணாநிதியின் 100 வது பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம், பூமலூர் ஊராட்சி-கிடாதுறை பகுதியில் திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., க.செல்வராஜ் தலைமையிலும் தி.மு.க.வை சேர்ந்த கிடாதுறை கே.பி.சீனிவாசன் ஏற்பாட்டிலும் 400 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.பின்னர் முத்தமிழ் அறிஞர் பூங்கா வனம் என பெயரிடப்பட்டு பெயர்ப்பலகை திறக்கப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து நடுவேலம்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ரூ.17,62,000 மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைகளுக்கான கட்டிடத்தை செல்வராஜ் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.

    பின்னர் சின்னியம்பாளையம் புதூர் பகுதியில் கொடியேற்றுவிழா நடைபெற்றது.அப்போது அதே பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிக்கு செல்வராஜ் எம்.எல்.ஏ., ரூ.10 ஆயிரம் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சிக்கு தி.மு.க. பல்லடம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சோமசுந்தரம் முன்னிலை வகித்தார்.மேலும் கட்சியின் பல்லடம் மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, திருப்பூர் வடக்கு மாவட்ட துணைச்செயலாளர் வக்கீல்குமார், மாவட்ட மகளிர்அணி துணைச்செயலாளர் நந்தினி, பல்லடம் ஒன்றியகுழு தலைவர் தேன்மொழி, மாவட்ட பிரதிநிதியும், பூமலூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவருமான செந்தில்தியாகராஜன், பூமலூர் ஊராட்சி மன்றத்தலைவர் பிரியங்கா, பூமலூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் நடராஜன், அவைத்தலைவர் பரமசிவம், பூமலூர் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் தங்கராஜ் , தி.மு.க. சரண்சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×