என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
உடுமலையில் அரிய வகை பச்சோந்தி
Byமாலை மலர்3 July 2022 1:41 PM IST
- பச்சோந்தி சுற்றி திரிவதை அப்பகுதி பொதுமக்கள் கண்டு வியப்படைந்தனர்.
- மரம் செடி கொடிகளின் நிறத்தைப்போலவே தங்கள் நிறத்தை மாற்றிக் கொள்கின்றன.
உடுமலை:
உடுமலைரெயில் நிலையம் அருகே அரிய வகை பச்சோந்தி சுற்றி திரிவதை அப்பகுதி பொதுமக்கள் கண்டு வியப்படைந்தனர். பொதுவாக குளிர் ரத்த பிராணி வகையைச் சேர்ந்த பச்சோந்திகள் உடலில் உள்ள வெப்பத்தை சமநிலையில் வைத்திருக்க நிறம் மாற்றும் தந்திரத்தை கடைப்பிடிக்கின்றன.
அடுத்து பெண் பச்சோந்தியை கவருவதற்கு எதிரிகளிடம் இருந்து காத்துக்கொள்ள பக்கத்தில் இருக்கும் மரம் செடி கொடிகளின் நிறத்தைப் போலவே தங்கள் நிறத்தை மாற்றிக் கொள்கின்றன. பச்சோந்தியின் குணாதிசையம் இடத்திற்கு தகுந்தாற்போல் தனது நிறத்தை மாற்றிக் கொள்ளும் தன்மை உடையது. வன பகுதிகளில் மட்டுமே காணப்படும் இந்த வகை பச்சோந்தியை நகர பகுதியில் பார்த்து பொதுமக்கள் ஆச்சரியம் அடைந்தனர்.
Next Story
×
X