search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விபத்தில்லா தீபாவளி  - தீயணைப்பு துறை சார்பில்   துண்டு பிரசுரம் வினியோகம்
    X

    கோப்புபடம். 

    விபத்தில்லா தீபாவளி - தீயணைப்பு துறை சார்பில் துண்டு பிரசுரம் வினியோகம்

    • கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து தீயணைப்பு துறையினர் துண்டு பிரசுரத்தை வினியோகம் செய்தனர்.
    • பொள்ளாச்சி ரோடு, பூ கடைக்கார்னர்,தினசரி மார்க்கெட், தாலுகா ஆபீஸ்ரோடு மற்றும் உடுமலை ரவுண்டானா பகுதிகளில் நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டது.

    தாராபுரம்:

    தாராபுரம் தீயணைப்பு துறை நிலை அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையில் தீயணைப்புத்துறை ஊழியர்கள் தீபாவளி பண்டிகை குறித்து விபத்தில்லா பட்டாசை பயன்படுத்த வேண்டி பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் தாராபுரம் கடைவீதி பகுதியில் துண்டு பிரசுரம் வழங்கி கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து தீயணைப்பு துறையினர் துண்டு பிரசுரத்தை வினியோகம் செய்தனர்.

    அப்போது பொள்ளாச்சி ரோடு, பூ கடைக்கார்னர், தினசரி மார்க்கெட், தாலுகா ஆபீஸ் ரோடு மற்றும் உடுமலை ரவுண்டானா பகுதிகளில் நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டது. துண்டு பிரசுரத்தில் பட்டாசு வெடிக்கும் போது பெரியவர்கள் தன் குழந்தைகளை தங்கள் கண்முன்னே பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டும். வாளிகளில் நிறைய தண்ணீர் மற்றும் மணல் தயாராக வைத்துக்கொள்ள வேண்டும். நீண்ட ஊதுபத்தி உபயோகத்தில் பக்கவாட்டில் பட்டாசு கொளுத்துவது நல்லது. அவ்வாறு கொழுத்தும்போது முகத்தை திருப்பியவாறு கொள்ள வேண்டும் உள்பட பல்வேறு நெறிமுறைகள் அந்த துண்டு பிரசுரத்தில் இடம் பெற்றுள்ளது.

    Next Story
    ×