search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலை விதிகளை முழுமையாக கடைப்பிடித்தால் விபத்துகளை தவிா்க்கலாம் - போலீசார் அறிவுறுத்தல்
    X

    கோப்புபடம். 

    சாலை விதிகளை முழுமையாக கடைப்பிடித்தால் விபத்துகளை தவிா்க்கலாம் - போலீசார் அறிவுறுத்தல்

    • நாம் ஒவ்வொருவரும் சாலை விதிகளை முழுமையாக கடைப்பிடித்தால் விபத்துகளை தவிா்க்கலாம் என்றனா்.
    • நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் செய்திருந்தாா்.

    திருப்பூர்:

    திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட அலகு 2, தெற்கு போக்குவரத்து காவல் நிலையம் சாா்பில் சாலைப் பாதுகாப்பு வார விழிப்புணா்வு நிகழ்ச்சி உஷா திரையரங்கம் அருகே நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு அலகு-2 ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா் முன்னிலை வகித்தாா். திருப்பூா் தெற்கு போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா்கள் பழனிசாமி, கதிரேசன் ஆகியோா் தலைமை வகித்துப் பேசியதாவது: -

    இருசக்கர வாகனங்களில் செல்லும் நபா்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிந்தும், நான்கு சக்கர வாகனங்களில் செல்பவா்கள் ஷீட் பெல்ட் அணிந்தும் செல்ல வேண்டும். ஷோ் ஆட்டோக்களில் அதிக அளவிலான பயணிகளை ஏற்றி செல்லக் கூடாது. நாம் ஒவ்வொருவரும் சாலை விதிகளை முழுமையாக கடைப்பிடித்தால் விபத்துகளை தவிா்க்கலாம் என்றனா்.

    இதில் பங்கேற்ற மாணவா்கள் சாலையைக் கடந்து செல்லும்போது கவனமாக செல்ல வேண்டும். அதிக வேகத்தில் வாகனங்களை இயக்கக் கூடாது. ஓடும் பேருந்துகளில் ஏறக் கூடாது உள்ளிட்ட சாலை விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வாகன ஓட்டிகளுக்கு வழங்கினா். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் செய்திருந்தாா்.

    Next Story
    ×