என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
காங்கயம் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு
- இக்கோவிலில் பல இடங்களில் சிதலமடைந்து காணப்படுவதால் கோவிலை புனரமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
- கோவில் முழுவதும் கற்களால் கட்டப்பட்டுள்ளதால், அவற்றின் பழமை தன்மை மாறாத வகையில் புனரமைக்கப்பட உள்ளது.
காங்கயம்:
காங்கேயம் பழைய கோட்டை செல்லும் சாலையில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான காசி விஸ்வநாதர் ஆலயம் உள்ளது.சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இக்கோவிலில் கடந்த 1996ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. கடந்த 26 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருந்து வந்துள்ளது. தற்போது இக்கோவிலில் பல இடங்களில் சிதலமடைந்து காணப்படுவதால் கோவிலை புனரமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக அறநிலையத்துறையின் ஒப்புதல் பெற வேண்டியுள்ளது. மேலும் கோவில் முழுவதும் கற்களால் கட்டப்பட்டுள்ளதால், அவற்றின் பழமை தன்மை மாறாத வகையில் புனரமைக்கப்பட உள்ளது.
இதற்காக திருப்பூர் மாவட்ட தொல்லியல் துறை முதன்மை ஆலோசகர் அர்ஜுனன் தலைமையிலான தொல்லியல் துறை அதிகாரிகள் கோவிலில் ஆய்வு மேற்கொண்டனர். கோவிலில் சேதமடைந்த பகுதிகள், மண்டபம், சிலைகள் உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். பின் இவற்றை அறிக்கையாக தொல்லியல்துறை ஆணையருக்கு அனுப்பி வைக்க உள்ளதாக தொல்லியல் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.