என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
காங்கயம் வாரச்சந்தையில் பெரிய வெங்காயம் கிலோ ரூ.120-க்கு விற்பனை - இல்லத்தரசிகள் அதிர்ச்சி
- காங்கயம் வாரச் சந்தையில் பெரிய வெங்காயம் கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டது.
- பெரிய வெங்காயத்தின் விலை இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
முத்தூர்:
காங்கயம் வாரச் சந்தையில் பெரிய வெங்காயம் கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டது.
காங்கயம் பஸ் நிலையம் அருகே வாரச்சந்தை வளாகம் உள்ளது .வாரம் தோறும் திங்கட்கிழமை கூடும் இந்த சந்தையில் காய்கறிகள், பழங்கள், மளிகை சாமான்கள், கீரைகள்,வீட்டு உபயோக பொருட்கள் முதற்கொண்டு அனைத்து பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு வாரம் தோறும் திங்கட்கிழமை அன்று 500-க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டு விற்பனை நடைபெறும். வார சந்தைக்கு காங்கயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான நகர, கிராம மக்கள் இங்கு வந்து ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகள், மளிகை சாமான்கள் மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி செல்வார்கள்.
இதன் காரணமாகவே வாரந்தோறும் திங்கட்கிழமை இந்த சந்தை நாளில் இந்த பகுதியில் உள்ள விவசாய தொழிலாளர்கள் ,தேங்காய் களம், அரிசி ஆலை, தேங்காய் எண்ணெய் ஆலைகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு வார சம்பளத்துடன் விடுமுறை விடப்படுகிறது. இதனால் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் நகர பகுதி மக்கள் இந்த சந்தைக்கு வந்து செல்வார்கள்.
நேற்று கூடிய வார சந்தையில் பெரிய வெங்காயம் கிலோ ரூ.120-க்கும், சின்ன வெங்காயம் கிலோ ரூ.80-க்கும், தக்காளி கிலோ ரூ.25-க்கும் விற்பனை செய்யப்பட்டது. பெரிய வெங்காயத்தின் விலை இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது பரவலாக பெய்து வரும் மழை காரணமாக பெரிய வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளது. இதனால் விலை ஏற்றமாக உள்ளது. மேலும் வரும் வாரங்களில் இன்னமும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.