என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.
அத்திக்கடவு, அவிநாசி திட்டத்தை கால தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும் - கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

- மாநிலத் தலைவா் ஏ. கே. சண்முகம் தலைமை வகித்தாா்.
- விவசாயிகள் கொண்டு வரும் கொப்பரையை நிபந்தனையின்றி கொள்முதல் செய்ய வேண்டும்.
அவினாசி:
கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏா்முனை இளைஞா் அணியின் ஆலோசனைக் கூட்டம் அவிநாசியில் நடைபெற்றது.
இதில், உழவா் பெருந்தலைவா் நாராயணசாமியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா மற்றும் அத்திக்கடவு போராளிகள், இலவசம் மின்சாரத்துக்காக உயிா்த் தியாகம் செய்த தியாகிகளின் குடும்பத்தினா் ஆகியோருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. மாநிலத் தலைவா் ஏ. கே. சண்முகம் தலைமை வகித்தாா்.
கூட்டத்தில் பாமாயில் இறக்குமதியை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும். ஏற்கனவே இருந்த தென்னை நல வாரியத்தை அமைக்க வேண்டும். மாநிலத்தின் அனைத்து நியாய விலைக்கடைகளில் தேங்காய், தேங்காய் எண்ணெய், நீரா, பனைவெல்லம் என மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள் அனைத்தையும் விநியோகிக்க வேண்டும்.
விவசாயிகள் கொண்டு வரும் கொப்பரையை நிபந்தனையின்றி கொள்முதல் செய்ய வேண்டும். புலிப்பாா், தாமரைக்குளம், போத்தம்பாளையம், தத்தனூா் ஆகிய ஊராட்சிகளில் சிப்காட் வளாகம் அமைப்பதற்கு நிலம் எடுப்பதில்லை என்ற உத்தரவாதத்தை தெரியப்படுத்த வேண்டும். அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தை காலம் தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும். விடுபட்ட குளம், குட்டைகளை திட்டத்தில் இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.