என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பல்லடத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச பெண் கைது
- எந்தவிதமான ஆவணங்களும் இன்றி சட்டவிரோதமாக தங்கி இருப்பது தெரியவந்தது.
- சென்னை புழல் சிறையில் அடைக்க அந்தப் பெண் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணர் பகுதியில் வெளிநாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் தங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு வெற்றிச்செல்வன் உத்தரவின் பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது கள்ளக்கிணர் மேற்கு தெருவில் இளவரசன் என்பவரது வீட்டில் தங்கி இருந்த வங்கதேசம், டாக்கா நகரைச் சேர்ந்த முகமது சபோலா என்பவரது மகள் சுமி என்கிற லீமா பேகம்(வயது 20) என்பவரை பிடித்து விசாரித்தபோது அவர் எந்தவிதமான ஆவணங்களும் இன்றி சட்டவிரோதமாக தங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவுப்படி சென்னை புழல் சிறையில் அடைக்க அந்தப் பெண் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.