search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பி.ஏ.பி., வாய்க்காலில்  தண்ணீர் திருட்டு - விவசாயிகள் புகார்
    X

    கோப்புபடம். 

    பி.ஏ.பி., வாய்க்காலில் தண்ணீர் திருட்டு - விவசாயிகள் புகார்

    • சி.செல்லமுத்து மற்றும் எம்.கோவிந்த சாமி ஆகியோருடன் நீர் வளத்துறை அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டனர்.
    • நீர் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் மீது உடுமலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கபட்டுள்ளது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையிலிருந்து பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் மூலம் நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பாசன வாய்க்கால்கள் வழியாக பாசன நீர் பகிர்ந்தளிக்கபட்டு வருகிறது. தற்போது மூன்றாம் மண்டல பாசனத்திற்கு பி.ஏ.பி., கால்வாய்களிலிருந்து 4-ம் சுற்றுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டு பாசனம் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் ஒருசிலர் இந்த கால்வாய்களில் கரைகளை சேதப்படுத்தி குழாய்கள் அமைத்து கடை மடை விவசாயிகளுக்கு நீர் தட்டுபாட்டை ஏற்படுத்தும் வகையில்நீரை உறிஞ்சி நீர்திருட்டில் ஈடுபடுவதாக புகார் வந்தது.இதைத்தொடர்ந்து பாசன சங்கதலைவர்கள் சி.செல்லமுத்து மற்றும் எம்.கோவிந்த சாமி ஆகியோருடன் நீர் வளத்துறை அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டனர்.

    அப்போது உடுமலையிலிருந்து பிரியும் மைவாடி பகிர்மான கால்வாயில் கரைகளை சேதப்படுத்தி பக்கவாட்டில் துளையிட்டு நிரந்தரமாக பி.வி.சி., குழாய்களை அமைத்து ஒரு சிலர் நீர் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.இதனை தொடர்ந்து நீர் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் மீது உடுமலை காவல்நிலையத்தில் புகார் அளிக்கபட்டுள்ளது.

    இது குறித்து நீர் வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், முறைகேடாக நீர்திருட்டில் ஈடுபட்டோர் மீது புகார் அளிக்கபட்டுள்ளதாகவும் வாய்க்கால் கரைகளை சேதபடுத்தி நீர் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    Next Story
    ×