search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடந்த சீசனில் நல்ல விலை கிடைத்ததால் பருத்தி சாகுபடியில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்
    X

    கோப்புபடம். 

    கடந்த சீசனில் நல்ல விலை கிடைத்ததால் பருத்தி சாகுபடியில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்

    • சிறப்புத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டும், விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை.
    • நிலையான விலை காரணமாக விவசாயிகள் லாபம் பெற்றனர்.

    உடுமலை:

    உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் 20 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பில் பருத்தி பயிரிடப்பட்டு வந்தது.பி.ஏ.பி., மண்டல பாசனத்தில் தண்ணீர் பற்றாக்குறை, நோய்த்தாக்குதல், விலை வீழ்ச்சி ஆகிய காரணங்களால் பருத்தி சாகுபடியை விவசாயிகள் கைவிடத்துவங்கினர்.கடந்த 2000ம் ஆண்டுக்குப்பிறகு, பருத்தி சாகுபடி முற்றிலுமாக கைவிடப்பட்டு, மக்காச்சோள சாகுபடி பரப்பு பல மடங்கு அதிகரித்தது.

    பருத்தி சாகுபடியை ஊக்குவிக்க மத்திய, மாநில அரசுகள் சார்பில் சிறப்புத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டும், விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில், கடந்த 2008ல் நூற்பாலை நிர்வாகத்தினர் ஒப்பந்த சாகுபடி முறையில் பருத்தி சாகுபடி மேற்கொள்ள விவசாயிகளுக்கு ஊக்கமளித்தனர்.அந்த ஆண்டு பல ஆண்டு இடைவெளிக்குப்பிறகு 100 ஏக்கர் பரப்பு வரை பருத்தி சாகுபடி மேற்கொள்ளப்பட்டது.பின்னர், மிக நீண்ட இழை பருத்தி மற்றும் நீண்ட இழை பருத்தி ரகங்களுக்கு நல்ல விலை கிடைக்க தொடங்கியது.இது விவசாயிகளை பருத்தி சாகுபடியை நோக்கி திரும்ப செய்தது.கடந்த 2009ல் உடுமலை பகுதியில் பரவலாக 200 நாட்கள் வயதுடைய மிக நீண்ட இழை பருத்தி, 150 நாட்கள் வயதுடைய நீண்ட இழை பருத்தி ரகம் பயிரிடப்பட்டு ஏக்கருக்கு 15 குவிண்டால் வரை விளைச்சல் கிடைத்தது.

    மிக நீண்ட இழை பருத்திக்கு ஒரு குவிண்டாலுக்கு 9 ஆயிரம் ரூபாயும், நீண்ட இழை பருத்தி 6 ஆயிரம் ரூபாயும் விலை கிடைத்தது. நிலையான விலை காரணமாக விவசாயிகள் லாபம் பெற்றனர்.கடந்தாண்டு பருத்தி சாகுபடி பரப்பு குறைவாகவே இருந்தது. ஆனால்அனைத்து ரக பருத்திக்கும் நல்ல விலை கிடைத்தது. இதனால் விவசாயிகள் ஆர்வம் பருத்தி சாகுபடிக்கு அதிகரித்துள்ளது.காரிப் பருவம் மற்றும் வரும் ஆகஸ்டு மாதத்தில் துவங்கும் பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்துக்கும், பருத்தி சாகுபடி பரப்பு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. அதற்கேற்ப வேளாண்துறை வாயிலாக பருத்தி சாகுபடிக்கு ஊக்கமளிக்க வேண்டும்.இதனால் பருத்தி வரத்து அதிகரித்து நூற்பாலைகளின் தேவையில் நிலவும் பற்றாக்குறையை சிறிது சமாளிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×