என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டம் குறித்த ஆய்வுக்கூட்டம் உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டம் குறித்த ஆய்வுக்கூட்டம்](https://media.maalaimalar.com/h-upload/2022/11/01/1784929-minister.jpg)
உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டம் குறித்த ஆய்வுக்கூட்டம்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்டஇயக்குநர் லட்சுமணன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- திருப்பூர் வடக்கு கே.என்.விஜயகுமார் , மடத்துக்குளம் சி.மகேந்திரன் ஆகியோர் முன்னிலையில் அனைத்துத்துறை அலுவலர்களுடன் நடைபெற்றது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் குறித்த மாவட்ட அளவிலான ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் வினீத் தலைமையில், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் , திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பல்லடம் எம்.எஸ்.எம்.ஆனந்தன் , உடுமலைப்பேட்டை உடுமலை கே.ராதாகிருஷ்ணன் , திருப்பூர் வடக்கு கே.என்.விஜயகுமார் , மடத்துக்குளம் சி.மகேந்திரன் ஆகியோர் முன்னிலையில் அனைத்துத்துறை அலுவலர்களுடன் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் திருப்பூர் மாவட்டத்திலுள்ள திருப்பூர் தெற்கு, திருப்பூர் வடக்கு, பல்லடம், அவிநாசி, காங்கேயம், தாராபுரம், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கிய முக்கிய 10 திட்டங்கள் குறித்து மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார்பாடி, திருப்பூர்சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாரயணன்,மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்டஇயக்குநர் லட்சுமணன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.