search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீடுகளில்  தனிநபர் இல்ல கழிப்பறை கட்டும் பணிடிசம்பர் மாதத்திற்குள்  முடிக்க  திட்டம்
    X

    கோப்புபடம். 

    வீடுகளில் தனிநபர் இல்ல கழிப்பறை கட்டும் பணிடிசம்பர் மாதத்திற்குள் முடிக்க திட்டம்

    • இத்திட்டத்தில் தனிநபர் இல்லக்கழிப்பறை அமைக்கும் பயனாளிக்கு பணிகள் நிறைவு செய்த பின் 12 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.
    • தியாண்டு கடந்து நடப்பு நிதியாண்டின் 6 மாதங்கள் முடிந்த பிறகும், கழிப்பிடம் அமைக்கும் இலக்கை எட்ட முடியாத நிலை தொடர்கிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் வீடுகளில், தனிநபர் இல்ல கழிப்பறை அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி அவிநாசி - 314, தாராபுரம் - 288, குடிமங்கலம் -1 74, காங்கயம் - 298, குண்டடம் - 484, மடத்துக்குளம் - 84, மூலனூர் - 50, பல்லடம் - 215, பொங்கலூர் - 261, திருப்பூர் - 231, உடுமலை - 303, ஊத்துக்குளி - 249, வெள்ளகோவில் - 194 என 3,145 வீடுகளில் தனிநபர் இல்ல கழிப்பறை அமைக்க அனுமதிக்கப்பட்டது.

    தனிநபர் இல்லக்கழிப்பறை அமைக்க, கூடுதல் செலவு ஏற்பட்டதாலும், திறந்தவெளி மலம் கழிப்பதை கட்டுப்படுத்தும் வகையில், தனிநபர் இல்லக்கழிப்பிடம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் தனிநபர் இல்லக்கழிப்பறை அமைக்கும் பயனாளிக்கு பணிகள் நிறைவு செய்த பின் 12 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.

    கடந்த 2022 - 23ம் நிதியாண்டில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்களுக்கு 3,145 கழிப்பறைகள் கட்ட மானியம் ஒதுக்கப்பட்டது. அதாவது தலா 12 ஆயிரம் ரூபாய் வீதம், 3 கோடியே 77 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மானியம் ஒதுக்கப்பட்டது.

    நிதியாண்டு கடந்து நடப்பு நிதியாண்டின் 6 மாதங்கள் முடிந்த பிறகும், கழிப்பிடம் அமைக்கும் இலக்கை எட்ட முடியாத நிலை தொடர்கிறது. கடந்த மாத நிலவரப்படி, 1,701 கழிப்பறைகள் மட்டும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.அதற்காக 2.04 கோடி ரூபாய் மானியம் விடுவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கூறுகையில், பணி முழுமையாக நிறைவு பெற்றால் மட்டுமே மானிய தொகை விடுவிக்கப்படும்.அதன்படி 40 சதவீதம் அளவுக்கு நிலுவை இருக்கிறது. இருப்பினும், டிசம்பர் மாத இறுதிக்குள் பணிகளை 100 சதவீதம் முடிக்க திட்டமிட்டுள்ளோம் என்றனர்.

    Next Story
    ×