என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
6 உழவர் சந்தைகளில் தினமும் 165 டன் காய்கறிகள் விற்பனை
- கடந்த வாரங்களில் தமிழகம் முழுவதும் உள்ள, உழவர் சந்தைகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.
- தினமும் 47 லட்சம் ரூபாய் மதிப்பிலான, காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் வடக்கு, தெற்கு, உடுமலை, பல்லடம், தாராபுரம், காங்கயம் பகுதியில், உழவர் சந்தைகள் இயங்கி வருகின்றன. இவற்றில், ஆயிரக்கணக்கான விவசாயிகள் உறுப்பினராக உள்ளனர்.
தமிழக அளவில் திருப்பூர் தெற்கு உழவர் சந்தையில், தினமும் 100 டன் காய்கறிகள் வரை விற்பனைக்கு வருகிறது. தினமும் 370 முதல் 380 விவசாயிகள் காய்கறி விற்கின்றனர்.
கடந்த வாரங்களில் தமிழகம் முழுவதும் உள்ள, உழவர் சந்தைகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.திருப்பூர் மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான காய்கறிகள் விற்கப்படுவதும், வாடிக்கையாளர் பயன்பெறுவதும் தெரிய வந்துள்ளது.
கடந்த சில வாரங்கள் நடத்தப்பட்ட ஆய்வின்படி ஒரு நாளின் சராசரி வியாபாரம் கண்டறியப்பட்டுள்ளது.மாவட்டத்தில் உள்ள 6 உழவர் சந்தைகளில்தினமும் 165 டன் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
அதாவது தினமும் 47 லட்சம் ரூபாய் மதிப்பிலான, காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. உழவர் சந்தைகளுக்கு தினமும் 645 வியாபாரிகள் வந்து காய்கறி விற்கின்றனர்.
கடந்த மாத நிலவரப்படி 14 ஆயிரத்து 566 பேர் தினமும் பயனடைந்து வந்துள்ளதாகவேளாண் வணிகத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.