search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தீபாவளி பண்டிகை பூக்கள் விலை கிடுகிடு உயர்வு
    X

    கோப்புபடம். 

    தீபாவளி பண்டிகை பூக்கள் விலை கிடுகிடு உயர்வு

    • தீபாவளி பண்டிகை நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படும் நிலையில் திருப்பூர் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை திடீரென அதிகரித்தது.
    • சம்பங்கி ரூ.40, பட்டு பூ ரூ.50, செவ்வந்தி ரூ.30 முதல் ரூ.40, அரளி ரூ.150 முதல் ரூ.200, ரோஜா பூ ரூ.120 ஆகிய விலைகளில் விற்பனை செய்யப்பட்டன.

    திருப்பூர்:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருப்பூரில் நேற்று பூக்களின் விலை கிடு, கிடுவென உயர்ந்தது. ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.1000-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    தீபாவளி பண்டிகை நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படும் நிலையில் திருப்பூர் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை திடீரென அதிகரித்தது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.320 -க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் ரூ.1000-ம் ஆக அதிகரித்தது. இதேபோல் ரூ.240-க்கு விற்பனை செய்யப்பட்ட முல்லைப் பூ ரூ.600-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஜாதி மல்லி ரூ.600-க் கு விற்பனை செய்யப்பட்டது. இதைத் தவிர பிற பூக்களின் விலை வழக்கம்போல் காணப்பட்டது.

    சம்பங்கி ரூ.40, பட்டு பூ ரூ.50, செவ்வந்தி ரூ.30 முதல் ரூ.40, அரளி ரூ.150 முதல் ரூ.200, ரோஜா பூ ரூ.120 ஆகிய விலைகளில் விற்பனை செய்யப்பட்டன.இவ்வாறு மல்லி முல்லை உள்ளிட்ட பூக்களின் விலை அதிகரித்த போதிலும் பண்டிகையை கருதி பொதுமக்களும் வியாபாரிகளும் பூக்களை அதிக அளவில் வாங்கி சென்றனர்.இதனால் பூ மார்க்கெட்டில் பூக்களின் விற்பனை மும்முரமாக நடந்தது. மழை காரணமாக பூக்களின் வரத்து குறைந்ததும் விலை உயர்வுக்கு ஒரு காரணம் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×