என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தீபாவளி சிறப்பு ரெயில்கள் - திருப்பூர் பயணிகள் எதிர்பார்ப்பு
- கூட்ட நெரிசல் உள்ள வழித்தடங்களில் அவ்வப்போது ஓரிரு ெரயில் மட்டுமே அறிவிக்கப்பட்டு வருகிறது.
- தினசரி இயங்கும் 85 சதவீத ெரயில்களில் டிக்கெட் முன்பதிவு நிறைவடைந்துள்ளது.
திருப்பூர்:
வருகிற 24ந்தேதி தீபாவளிக்கு சொந்த ஊர் செல்வோருக்காக தமிழக அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆனால், சிறப்பு ெரயில் குறித்த விரிவான அறிவிப்பை தெற்கு ெரயில்வே வெளியிடவில்லை. கூட்ட நெரிசல் உள்ள வழித்தடங்களில் அவ்வப்போது ஓரிரு ெரயில் மட்டுமே அறிவிக்கப்பட்டு வருகிறது.
தினசரி இயங்கும் 85 சதவீத ெரயில்களில் டிக்கெட் முன்பதிவு நிறைவடைந்துள்ளது. கோவை மற்றும் சென்னையில் இருந்து நாகர்கோவில், திருநெல்வேலி, மதுரை வழித்தடத்தில் செல்லும் ெரயில்களில் இருக்கைகள் நிரம்பி, காத்திருப்போர் பட்டியல் துவங்கியுள்ளது. பண்டிகைக்கு முந்தைய மற்றும் பிந்தைய சிறப்பு ெரயில்கள் குறித்த அறிவிப்பு வெளிவரவில்லை.
இது குறித்து ெரயில் டிக்கெட் முன்பதிவு மைய அதிகாரிகள் கூறுகையில்,கூட்ட நெரிசலுக்கு ஏற்ப சென்னை சென்ட்ரல், எழும்பூர், கோவை, திருவனந்தபுரம், எர்ணாகுளத்தில் இருந்து சிறப்பு ெரயில் இயக்க வாய்ப்புள்ளது.
இந்த வார இறுதிக்குள் சிறப்பு ெரயில் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும். தற்போது முன்பதிவு நிறைந்துள்ள பெட்டிகளில் தேவையிருப்பின் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என்றனர்.