என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வழிப்பறி சம்பவங்களால் பீதியில் தவிக்கும் காங்கயம் பொதுமக்கள்
- கல்லாங்காட்டுபுதூர் அருகே வந்தபோது அந்த 2 ஆசாமிகளும் திடீரென பாலாமணி ஓட்டிச் சென்ற மொபட்டை வழிமறித்தனர்.
- காங்கயம் போலீஸ் நிலையத்தில் பாலாமணி புகார் செய்தார்.
காங்கயம்:
காங்கயம் நகரம், மூர்த்திரெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த குமாரசாமி என்பவரது மனைவி பாலாமணி (வயது 44). இந்தநிலையில் பாலாமணி நேற்று முன்தினம் மதியம் காடையூர் - கல்லாங்காட்டு புதூர் செல்லும் சாலையில் தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது பாலாமணியை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தபடி 2 ஆசாமிகள் வந்தனர். கல்லாங்காட்டுபுதூர் அருகே வந்தபோது அந்த 2 ஆசாமிகளும் திடீரென பாலாமணி ஓட்டிச் சென்ற மொபட்டை வழிமறித்தனர்.
பின்னர், பாலாமணியை கீழே தள்ளிவிட்டு அவர் அணிந்திருந்த 6 பவுன் தாலிச்சங்கிலியை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் ஏறி அங்கிருந்து தப்பிச்சென்று தலைமறைவானார்கள். இதுகுறித்து காங்கயம் போலீஸ் நிலையத்தில் பாலாமணி புகார் செய்தார்.
அதன் பேரில் காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாலிச்சங்கிலியை பறித்து சென்ற 2 மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர். காங்கயம் பகுதியில் வழிப்பறி சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருவதால் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி வருகிறது.