search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின் கட்டண உயர்வால்  மக்கள் மத்தியில் தி.மு.க. அதிருப்தியை சம்பாதிக்க நேரிடும் -  மா.கம்யூ.பாலகிருஷ்ணன் பேச்சு
    X

    கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேசிய போது எடுத்த படம்.

    மின் கட்டண உயர்வால் மக்கள் மத்தியில் தி.மு.க. அதிருப்தியை சம்பாதிக்க நேரிடும் - மா.கம்யூ.பாலகிருஷ்ணன் பேச்சு

    • 2024 தேர்தலில், பா.ஜ., வை எதிர்த்து, மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றிபெறும்.
    • வடக்கு மாநகர செயலாளர் கணேசன் தலைமை வகித்தார்.

    திருப்பூர்:

    திருப்பூர் வடக்கு மாநகர மா.கம்யூ., சார்பில், சமூக நல்லிணக்க பொதுக்கூட்டம், எம்.எஸ்., நகரில் நடந்தது. வடக்கு மாநகர செயலாளர் கணேசன் தலைமை வகித்தார். மாநில குழு உறுப்பினர் காமராஜ் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் பாலகிரு ஷ்ணன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    மத நல்லிணக்கத்துக்கு, சமூக நல்லிணக்கத்துக்கு யார் இடையூறு ஏற்படுத்தி னாலும், அது எத்தகைய சக்தியாக இருந்தாலும், மா.கம்யூ., எதிர்த்துநிற்கும்.

    விசைத்தறி தொழில் முடங்கியுள்ளது; நுால் விலை உயர்ந்து ஜவுளித்தொழில் முடங்கியுள்ளது, எரிபொருட்கள் விலை உயர்ந்துகொண்டே செல்கி ன்றன. இதற்கு எதிராக போராட யாருமில்லை.

    வரும் 2024 தேர்தலில், பா.ஜ., வை எதிர்த்து, மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றிபெறும். மத்திய அரசுக்கு அடிபணியும் வகையில், மின்கட்டணத்தை உயர்த்தக்கூடாது. இதனால், மக்கள் மத்தியில் தி.மு.க., அதிருப்தியை சம்பாதிக்கநேரிடும். பா.ஜ.,வுக்கு எதிரான போராட்டத்தை இது, பலவீனப்படுத்தும். இவ்வாறு, அவர் பேசினார்.

    Next Story
    ×