search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொங்கல் பரிசு தொகுப்புக்கு  கரும்பு கொள்முதல் செய்யக்கோரி காத்திருப்பு போராட்டம் - விவசாயிகள் அறிவிப்பு
    X

    கோப்புபடம். 

    பொங்கல் பரிசு தொகுப்புக்கு கரும்பு கொள்முதல் செய்யக்கோரி காத்திருப்பு போராட்டம் - விவசாயிகள் அறிவிப்பு

    • தமிழக அரசு கடந்த ஆண்டைப் போலவே பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு விவசாயிகளிடம் இருந்து கரும்பைக் கொள்முதல் செய்ய வேண்டும்.
    • வரும் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு இந்தப் போராட்டம் தொடங்க உள்ளது.

    திருப்பூர்:

    தமிழக அரசு பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு விவசாயிகளிடம் இருந்து கரும்பு கொள்முதல் செய்யக்கோரி சென்னை தலைமைச் செயலகம் முன்பு வருகிற 27-ந்தேதி முதல் போராட்டம் நடைபெறும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் தெரிவித்துள்ளது.

    இது குறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனா் ஈசன் முருகசாமி, மாநிலத் தலைவா் ஆா்.சண்முகசுந்தரம், மாநிலப் பொதுச் செயலாளா் எஸ்.முத்துவிஸ்வநாதன் ஆகியோா் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    தமிழக அரசு கடந்த ஆண்டைப் போலவே பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு விவசாயிகளிடம் இருந்து கரும்பைக் கொள்முதல் செய்ய வேண்டும். இந்த கோரிக்கை நிறைவேறும் வரை தலைமைச் செயலகத்தின் முன்பு போராட்டம் நடத்த உள்ளோம். வரும் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு இந்தப் போராட்டம் தொடங்க உள்ளது. இந்த கோரிக்கை தொடா்பாக பல்வேறு விவசாய சங்கத் தலைவா்கள், சம்பந்தப்பட்ட அமைச்சா்களிடமும், துறையின் செயலாளரிடமும் கோரிக்கை வைத்தும் எவ்வித முன்னேற்றமும் இல்லை. ஒரு ஏக்கருக்கு ரூ. 2 லட்சம் செலவு செய்து, கடன் பெற்று கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகள் தமிழக அரசு பொங்கல் கரும்பை கொள்முதல் செய்யாவிட்டால் தற்கொலை செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா்.ஆகவே கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகளிடமிருந்து அந்தந்த மாவட்டங்களிலேயே கொள்முதல் செய்து பொங்கல் பரிசுத்திட்டத்தில் கரும்பு வழங்கிட உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இந்த கோரிக்கை நிறைவேறும் வரையில் தொடா் காத்திருப்பு போராட்டத்தை நடத்த உள்ளோம் என்றனா்.

    Next Story
    ×