search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காங்கயத்தில் உணவுத்திருவிழா - அடுத்த மாதம் நடக்கிறது
    X

    கோப்புபடம். 

    காங்கயத்தில் உணவுத்திருவிழா - அடுத்த மாதம் நடக்கிறது

    • நுகர்வோர் நலன் கருதி, ரேஷனில் தரமான அரிசி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
    • உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை பெற்றுக்கொண்டார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட அளவிலான பொது வினியோக திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. டி.ஆர்.ஓ., ஜெய்பீம் வரவேற்றார். அமைச்சர்கள் சக்ரபாணி, சாமிநாதன், கயல்விழி, பொதுவினியோகதிட்டப்பணிகளை ஆய்வு செய்தனர்.உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு முதன்மை செயலர் ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-

    நுகர்வோர் நலன் கருதி, ரேஷனில் தரமான அரிசி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். மாவட்டத்தில், ஆற்று வெள்ளம், மழை வெள்ளத்தால், ரேஷன் கடை பொருட்கள் பெற முடியாத பகுதிகள் இருந்தால், கிராமத்துக்கே சென்று பொருட்கள் வழங்க வேண்டும். மலைகிராம மக்களுக்கு, ரேஷன் பொருட்களை தேடிச்சென்று வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தை சேர்ந்த 94 ஆயிரம் பேர், வெளிமாநிலங்களில் இருந்தபடி, ரேஷன் பொருள் பெற்று வருகின்றனர். தகுதியற்ற நபர்களுக்கு, சிறப்பு சலுகை கார்டுகள் வழங்க கூடாது.தகுதியான நபர்களுக்கு சலுகை கிடைக்காமலும் இருக்கக் கூடாது.இவ்வாறு அவர் பேசினார்.

    உணவு பாதுகாப்புத்துறை சார்பில், ஆகஸ்டு 7ந் தேதி, காங்கயத்தில் உணவுத்திருவிழா நடக்க உள்ளது. திருவிழாவுக்கான, போஸ்டர்களை, அமைச்சர்கள் வெளியிட, உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை பெற்றுக்கொண்டார்.

    Next Story
    ×