என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருப்பூரில் அரசு பள்ளி மாணவர்கள் திடீர் போராட்டம்
- கையில் கயிறு, நெற்றியில் விபூதி பூசக்கூடாது என கூறுவதாக மாணவர்கள் புகார் தெரிவித்தனர்.
- மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு வகுப்பறைகளுக்கு சென்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் கொங்கு மெயின்ரோட்டில் சின்னசாமியம்மாள் ஆண்கள் மேல்நிலை ப்பள்ளி உள்ளது.இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்தநிலையில் அங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் 2பேர் ஒருமையில் பேசுவதாகவும், கையில் கயிறு, நெற்றியில் விபூதி பூசக்கூடாது என கூறுவதாக மாணவர்கள் புகார் தெரிவித்தனர்.
சில நாட்களுக்கு முன்பு அந்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பள்ளி தலைமையாசிரியரிடம் மாணவர்கள் புகார் தெரிவித்தனர். ஆனால் தலைமையாசிரியர் எந்தவித நடவடிக்கை யும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனை கண்டித்து இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து பள்ளி வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்த தகவல்அறிந்ததும் திருப்பூர் வடக்கு போலீசார் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு வகுப்பறைகளுக்கு சென்றனர்.