என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பல்லடத்தில் ஒலிபெருக்கி மூலம் போக்குவரத்து நெருக்கடியை சீர் செய்யும் போலீசார்
- மங்கலம் ரோட்டில் இருந்து பொள்ளாச்சி ரோடு செல்வதற்கு 30 வினாடிகளும் சிக்னல் அமைக்கப்பட்டு இருந்தது.
- பல்லடம் பொதுமக்கள் போக்குவரத்து விதிகளை மதித்து விபத்துக்களை தவிர்க்கலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
பல்லடம்:
பல்லடம் நகரமானது கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்தநிலையில் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையுடன் திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலை,அவிநாசி, தாராபுரம் ஆகிய மாநில நெடுஞ்சாலைகள் இணைவதால், பல்லடத்தில் வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்து வருகிறது. கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை எண் 81 ல் தினமும் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேலான வாகனங்கள் செல்கின்றது. திருமணம் போன்ற விஷேச நாட்களில் இந்த எண்ணிக்கை 60 ஆயிரத்தைத் தாண்டும்.இந்த நிலையில் போக்குவரத்தை கட்டுப்படுத்துவதற்காக பல்லடம் நால்ரோடு பகுதியில் சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது. இதில் கோவை -திருச்சி ரோட்டில் மேற்கிலிருந்து கிழக்காக செல்ல 45 வினாடிகளும், அதேபோல கிழக்கிலிருந்து மேற்காக செல்ல 45 வினாடிகளும் அனைத்து வாகனங்களும் செல்ல அமைக்கப்பட்டு இருந்தது.
அதுபோல மங்கலம் ரோட்டில் இருந்து பொள்ளாச்சி ரோடு செல்வதற்கு 30 வினாடிகளும் சிக்னல் அமைக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் பெரிய நகரங்களில் உள்ளது போல் முதல் 25 வினாடிகளுக்கு நேராக செல்லும் வாகனங்களுக்கும், கடைசி 20 வினாடிகளுக்கு பக்கவாட்டு ரோட்டில் செல்லும் வாகனங்களும் செல்ல சிக்னல் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதனை அறிவுறுத்துவதற்காக நால்ரோடு பகுதியில் போக்குவரத்து போலீசார் ஒலிபெருக்கி மூலம் சிக்னல் குறித்து அறிவித்து வருகின்றனர். இது குறித்து போக்குவரத்து போலீசார் கூறுகையில்:- பெரிய நகரங்களில் உள்ளது போல் தற்பொழுது பல்லடத்திலும் சிக்னல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி நேராகச் செல்லும் வாகனங்களுக்கு 25 வினாடிகளும், பக்கவாட்டு ரோட்டில் செல்லும் வாகனங்களுக்கு 20 வினாடிகளும் சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் கோவை - திருச்சி ரோட்டில் செல்லும் வாகனங்கள் 2 வழிகளிலும் ஒரே நேரத்தில் செல்லலாம். இதனால் போக்குவரத்து நெரிசல் குறையும். இது குறித்து பொதுமக்களுக்கு தெளிவு படுத்துவதற்காக ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டு வருகிறது. எனவே இந்த புதிய நடைமுறையை பின்பற்றி பல்லடம் பொதுமக்கள் போக்குவரத்து விதிகளை மதித்து விபத்துக்களை தவிர்க்கலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்