search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலை நகராட்சியில் சாலையோர வியாபாரிகள்  கணக்கெடுப்பு  பணி
    X

    கோப்புபடம். 

    உடுமலை நகராட்சியில் சாலையோர வியாபாரிகள் கணக்கெடுப்பு பணி

    • உடுமலை நகராட்சியில் சாலையோர வியாபாரிகள் குறித்த கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
    • தங்களுடைய வியாபார இடத்துக்கே வந்து புகைப்படம் எடுத்து கணக்கெடுப்புப் பணி மேற்கொள்ளப்படும்.

    உடுமலை:

    உடுமலை நகராட்சியில் சாலையோர வியாபாரிகள் குறித்த கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இது குறித்து உடுமலை நகராட்சித் தலைவா் மு.மத்தீன், ஆணையா் சத்யநாதன் ஆகியோா் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    உடுமலை நகராட்சியில் சாலையோர வியாபாரிகள் குறித்த கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பணிகள் முடிவுற்றவுடன் அடையாள அட்டை வழங்கப்படும். இந்த அடையாள அட்டையை அரசின் பல்வேறு உதவித் திட்டங்களுக்கும், பாரத பிரதமரின் சாலையோர வியாபாரிகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வங்கியில் கடனுதவி பெறவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    கணக்கெடுப்பு பணிக்கு வியாபாரிகள் தங்களது ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, குடியிருப்பு முகவரி குறித்த ஆதாரத்துடன் தயாா் நிலையில் இருக்குமாறும், தங்களுடைய வியாபார இடத்துக்கே வந்து புகைப்படம் எடுத்து கணக்கெடுப்புப் பணி மேற்கொள்ளப்படும். மேலும், விவரங்களுக்கு நகரமைப்பு பிரிவிலோ அல்லது சமுதாய அமைப்பாளா்களையோ தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×