search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலையில்  மளிகைக்கடையில் நூதன முறையில் பொருட்களை திருடிய டிப்டாப் ஆசாமி
    X

    கோப்புபடம். 

    உடுமலையில் மளிகைக்கடையில் நூதன முறையில் பொருட்களை திருடிய 'டிப்டாப்' ஆசாமி

    • மளிகைக் கடையில் சுமார் ரூ.12 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
    • கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த வீடியோ காட்சிகளின் அடிப்ப டையில் குற்றவாளியை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    உடுமலை:

    உடுமலை கபூர்கான் வீதியிலுள்ள உழவர் சந்தைக்கு எதிரில் ஸ்டாலின் என்பவர் மளிகைக் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்தநிலையில் நேற்று கடைக்கு வந்த டிப்டாப் ஆசாமி ஒருவர், தான் வெளியூரைச் சேர்ந்தவர் என்றும் கோவிலில் அன்னதானம் செய்வதற்கு மளிகைப்பொருட்கள் வாங்க வந்திருப்பதாக தெரிவித்தார்.

    இதனையடுத்து அவர் கொடுத்த பட்டியலில் இருந்த அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட ரூ.12 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை ஒரு வாடகை ஆட்டோவில் ஏற்றி ஆண்டாள் சீனிவாசன் லே அவுட் பகுதியில் உள்ள கோவிலுக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பொருட்களை இறக்கி வைத்த அந்த நபர் மேலும் சில பொருட்கள் தேவைப்படுவதாகவும் அவற்றை கொண்டு வந்து கொடுத்து விட்டு மொத்தமாக பணம் பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.

    இதனையடுத்து மளிகைக் கடை உரிமையாளரும் கடைக்கு சென்று பொருட்களை எடுத்துக் கொண்டு கோவிலுக்கு வந்துள்ளார். அங்கே அந்த நபரையும் காணவில்லை, மளிகைப் பொருட்களையும் காணவில்லை. கோவிலில் இருந்தவ ர்களிடம், இன்னும் சில கோவில்க ளுக்கு பொரு ட்களை பிரித்து கொடுக்க வேண்டியி ருப்பதாகக் கூறி பொருட்களை ஒரு காரில் ஏற்றி கொண்டு அந்த நபர் தப்பிச் சென்று ள்ளார்.நூதன முறையில் ஏமாற்றி மளிகைக் கடையில் சுமார் ரூ.12 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

    இதுகுறித்து மளிகைக் கடை உரிமையாளர் ஸ்டாலின் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த வீடியோ காட்சிகளின் அடிப்ப டையில் குற்றவாளியை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×