என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தெரிவிக்க இணையதள வசதி
- பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான இணையவழி, கணினி வழி குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.
- தன்னார்வ அமைப்புகள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான இணையவழி, கணினி வழி குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற குற்றங்களை கையாளும் வகையில் இந்திய அரசு சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் என்ற திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இதுபோன்ற குற்றங்கள் தொடர்பாக புகார் அளிக்க நிர்பயா நிதியின் கீழ் தேசிய இணைய வழி குற்றங்கள் முறையிடல் வலைதளமானwww.cybercrime.gov.inஎன்ற இணையதள முகவரி வெளியிடப்பட்டுள்ளது. இணையவழி நிதி மோடிகள் தொடர்பாக புகார் அளிக்க தேசிய கட்டணமில்லா உதவி அழைப்பு எண்.1930 செயல்படுத்தப்பட்டுள்ளன. இந்த எண்ணில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம். இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான இணைய வழி குற்றங்களை தடுக்க ஒத்துழைக்க வேண்டும் என்று சமூக ஊடகங்களில் அரசு அலுவலர்கள், தன்னார்வ அமைப்புகள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கலெக்டர் கூறியுள்ளார்.