என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பல்லடம் அருகே காற்றாலைகளில் கேபிள் வயர் திருடிய5 பேர் கைது
- சந்தேகத்தின் பேரில் 5 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் காற்றாலைகளில் கேபிள் வயர் திருடும் கும்பல் என்பது தெரிய வந்தது.
- இந்த 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் ஊராட்சி, வடமலைபாளையம் ஊராட்சி உள்பட பல்வேறு பகுதிகளில் ஏராளமான காற்றாலைகள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த காற்றாலைகளில் உள்ள கேபிள் வயர்கள் அடிக்கடி திருட்டு போவதும் நடந்து வந்தது. இது குறித்து காற்றாலை உரிமையாளர்கள் காமநாயக்கன்பாளையம் போலீசில் புகார் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் நேற்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்தின் பேரில் 5 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் காற்றாலைகளில் கேபிள் வயர் திருடும் கும்பல் என்பது தெரிய வந்தது. அவர்களிடம் போலீசார் மேற்கொண்டு நடத்திய விசாரணையில் அவர்கள் மாதப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட தொட்டம்பட்டி மற்றும் வடமலைபாளையம் பகுதிகளில் உள்ள காற்றாலைகளில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள கேபிள் வயர்களை திருடியது தெரியவந்தது. உடனடியாக அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.90 ஆயிரம் ரொக்கம் மற்றும் ஒரு வேன், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை சேர்ந்த முருகேசன் என்பரது மகன் வேல்குமார் (வயது 28 ), அதே பகுதியை சேர்ந்த பிச்சை நாடார் என்பவரது மகன் மாரியப்பன் (38), வெள்ளைச்சாமி என்பவரது மகன் பெருமாள் (32), தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்த ராமன் என்பவரது மகன் விஜி (28), புதுக்கோட்டை மாவட்டம் ,இலுப்பூர் பகுதியை சேர்ந்த சின்னக்கண்ணு என்பவரது மகன் ஜீவானந்தன் (23) என்பதும் தெரிய வந்தது. இந்த 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.