என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
சேவூா் அருகே வேன் மோதி பாத்திர வியாபாரி பலி
Byமாலை மலர்7 Nov 2023 1:28 PM IST
- சேவூரை அடுத்த தண்டுக்காரம்பாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா்.
- பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.இது குறித்து சேவூா் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
அவிநாசி:
அவிநாசியை அடுத்த சேவூா் பகுதியில் வசித்து வருபவா் விருதுநகரை சோ்ந்த ஞானராஜ் (வயது 55), பாத்திர வியாபாரி. இவா், சேவூரை அடுத்த தண்டுக்காரம்பாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா்.அப்போது, அவ்வழியாக வந்த வேன் ஞானராஜின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.இது குறித்து சேவூா் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
Next Story
×
X