என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![நீட் தேர்வு: அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி நீட் தேர்வு: அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி](https://media.maalaimalar.com/h-upload/2022/06/26/1719184-student.jpg)
கோப்புப்படம்
நீட் தேர்வு: அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- அருகில் உள்ள பள்ளிகளில் பங்கேற்று பயனடையலாம்.
- ஆங்கிலத்தில் கையேடுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
திருப்பூர்:
மருத்துவ படிப்பில் சேர நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அரசு பள்ளி மாணவர்களை தயார்ப்படுத்த கல்வித்துறை சார்பில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவது வழக்கம். ஜூலை 17ந் தேதி நீட் தேர்வு நடத்தப்படும் நிலையில் திருப்பூரில் விண்ணப்பித்த 474 அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூரின் 13 ஒன்றியம் வாரியாக அரசுப்பள்ளிகளில் அமைக்கப்பட்ட பயிற்சி மையங்களில் இதற்கான சிறப்பு பயிற்சி தொடங்கியது. ஜூலை 15 வரை நடக்கும் இப்பயிற்சியில் அரசு பள்ளி மாணவர்கள் தங்கள் வசதிக்கேற்ப அருகில் உள்ள பள்ளிகளில் பங்கேற்று பயனடையலாம். இதுகுறித்து மாவட்ட நீட் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் கூறியதாவது:-
பிளஸ் 2 முடிவு வெளியான நிலையில் நீட் தேர்விற்கு, 20 நாட்களே உள்ளன. மிக குறுகிய காலத்தில் மாணவர்களை தயார்ப்படுத்த சிறப்பு ஏற்பாடு செய்துள்ளோம். திருப்பூர் மாவட்டத்தில்ஜெய்வாபாய் மகளிர் மேல்நிலைப்பள்ளி, கே.எஸ்.சி., ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நீட் பயிற்சி வழங்கப்படுகிறது. ஒவ்வொரு பாடத்திற்கும் சிறந்த ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வழங்கப்படுகின்றன.
காலை 9:30 மணி முதல் மாலை 4:30மணி வரை நடக்கும் பயிற்சியில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் ஆன்லைன் பயிற்சி தேர்வுகள் நடத்தப்படும். அதிக மதிப்பெண் பெற இயற்பியல், வேதியியல், தாவரவியல், உயிரியல் பாடங்களுக்கு என்.சி.இ.ஆர்.டி., பாடத் திட்டம், முந்தைய நீட் தேர்வு வினாத்தாட்களை ஒப்பிட்டு தமிழ், ஆங்கிலத்தில் கையேடுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.