என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருப்பூர் வரும் வடமாநில பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
- மகாராஷ்டிரா, டில்லி உள்ளிட்ட மாநிலங்களில் தினசரி பாதிப்பு 3 இலக்கத்தில் பதிவாகி வருகிறது.
- கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர் .
திருப்பூர்:
தமிழகத்துக்கு வேலைவாய்ப்புக்களை தேடி, பீகார், ஒடிசா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வடமாநிலத்தினர் ரெயில் மூலம் வருகின்றனர்.தமிழகத்தில் இயங்கும் சூப்பர்பாஸ்ட், எக்ஸ்பிரஸ் ெரயில்களில் பெரும்பாலும் பயணிப்பவராக வட மாநிலத்தவரே உள்ளனர். நாட்டில் ஆயிரத்துக்கும் கீழ் குறைந்திருந்த ஒரு நாள் தொற்று, மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
குறிப்பாக மகாராஷ்டிரா, டில்லி உள்ளிட்ட மாநிலங்களில் தினசரி பாதிப்பு 3 இலக்கத்தில் பதிவாகி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 8,582 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இது கடந்த 93 நாட்களில் இல்லாத அளவாகும்.இருப்பினும் ரெயில்களில் வடமாநிலத்தினர் எண்ணிக்கை சற்றும் குறையவில்லை. நேற்று முன்தினம் திருப்பூர் ரெயில் நிலையம் வந்த ரப்திசாகர், ஆலப்புழா, கேரளா எக்ஸ்பிரஸ் ரெயிலில் 1,500க்கும் அதிகமான வடமாநிலத்தினர் வந்திறங்கினர்.
ரெயில் டிக்கெட் முன்பதிவு மைய அதிகாரிகள் கூறுகையில், வடமாநிலத்தினர் ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இங்கிருந்து முன்பதிவு செய்து தினமும் பலர் பயணிக்கின்றனர்.கொரோனா மூன்றாவது அலை முடிவுக்கு வந்த பின் நடப்பாண்டு துவக்கத்தில் இருந்த நிலை தற்போதும் தொடர்கிறது. வடமாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரிப்பால், ரெயிலில் பயணிப்போர் எண்ணிக்கை குறையவில்லை. வழக்கம்போல் உள்ளது என்றனர். இதனிடையே கொரோனா பரவலை தடுக்க திருப்பூர் ரெயில் நிலையத்தில் வடமாநில பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.