search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நவராத்திரி விழாவை முன்னிட்டு விதவிதமான கொலு பொம்மைகள் விற்பனை
    X

    கோப்புபடம். 

    நவராத்திரி விழாவை முன்னிட்டு விதவிதமான கொலு பொம்மைகள் விற்பனை

    • சரஸ்வதி தேவியின் அருளைப்பெறவும், நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.
    • கொலு செட் பொம்மைகள் 150 முதல் 4 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

    திருப்பூர்:

    அம்பிகையை தினமும் ஒவ்வொரு வடிவில் வழிபடும், நவராத்திரி விழா புரட்டாசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் தொடங்கி 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது.நடப்பாண்டு வருகிற 25ல் நவராத்திரி விழா துவங்குகிறது. விழாவின் 9-வது நாள் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. 10வது நாள், விஜய தசமியாகவும் வழிபடப்படுகிறது.நவராத்திரி விழாவை முன்னிட்டு வீடு மற்றும் கோவில்களில் கொலு வைத்தும் முதல் 3 நாட்கள் துர்க்கை, அடுத்த 3 நாட்கள் லட்சுமி வடிவாகவும், கடைசி 3 நாட்கள் சரஸ்வதி தேவியின் அருளைப்பெறவும், நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.

    இதற்காக 9 கொலு படிகள் அமைத்து பொம்மைகளை அலங்கரித்து வழிபாடு நடத்தப்படுகிறது.நவராத்திரி விழா துவங்க உள்ளதால் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு கடைகளில் கொலு பொம்மைகள் விற்பனை துவங்கியுள்ளது.மண் பாண்ட விற்பனைக்கடைகளில் மண்ணால் செய்யப்பட்ட, சுவாமிகளின் சிலைகள் மற்றும் பறவை, மனிதர்கள் என அனைத்து வகையான சிலைகள் விற்பனைக்கு தயாராகியுள்ளது.

    இதில் தசாவதாரம், திருமணம், அஷ்டலட்சுமி, ஆண்டாள், கிருஷ்ண லீலை, சீதா கல்யாணம், வாஸ்து லட்சுமி, திருமண நிகழ்வு, கல்யாண சீர்வரிசை, தசாவதாரம், படகு, கிருஷ்ணவதாரம் என பல்வேறு நிகழ்வுகளை குறிக்கும் வகையில் பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளன.மேலும் சிவன், பார்வதி, முருகன், விநாயகருடன் கைலாயத்தில் அமர்ந்திருக்கும் காட்சி கொண்ட பொம்மை, சரவணப்பொய்கையில் தாமரை மீது முருகன் அவதரித்த கோலம், ராவணன் ஆட்சி மன்றக்கூடம் எனகுழந்தைகள், விலங்குகள், பறவைகள், தலைவர்கள் என பலவித பொம்மைகள் தனித்தனியாகவும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.தனி கொலு பொம்மைகள் 50 முதல் 600 ரூபாய் வரையிலும், கொலு செட் பொம்மைகள் 150 முதல் 4 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

    Next Story
    ×