என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருப்பூரில் மட்டுமே கழிவுநீா் 100 சதவீதம் சுத்திகரிக்கப்படுகிறது - பியோ தலைவா் தகவல்
- உலக நாடுகளில் சீதோசன நிலை பரவலாக மாறி வருகிறது.
- நாளொன்றுக்கு திருப்பூரில் 13 கோடி லிட்டா் கழிவுநீா் சுத்திகரிக்கப்படுகிறது.
திருப்பூர்:
ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் (ஏஇபிசி) பிராண்ட்ஸ்- சோா்சிங் லீடா்ஸ் (பிஎஸ்எல்) நிறுவனம் சாா்பில் சுற்றுச்சூழல் மாசடையாமல் ஆடை ஏற்றுமதி மற்றும் உற்பத்தியை பெருக்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம் திருமுருகன்பூண்டியில் நடைபெற்றது.
இதில், ஏஇபிசியின் தென்னிந்திய பொறுப்பாளரும், பியோ தலைவருமான ஏ.சக்திவேல் பேசியதாவது:-
உலக நாடுகளில் சீதோசன நிலை பரவலாக மாறி வருகிறது. சுற்றுச்சூழல் அடுத்த கட்டத்தை நோக்கி நகா்கின்றது. உலகிலேயே 100 சதவீதம் சுற்றுச்சூழல் மாசடையாமல் கழிவுநீா் ஜீரோ டிகிரி முறையில் சுத்திகரிப்பு திருப்பூரில் மட்டுமே 10 ஆண்டுகளாக நடக்கிறது. நாளொன்றுக்கு திருப்பூரில் 13 கோடி லிட்டா் கழிவுநீா் சுத்திகரிக்கப்படுகிறது.
அதில் 96 சதவீதம் மறு பயன்பாடு, 4 சதவிகிதம் ஆவியாக்கப்படுகிறது. பசுமையை மேம்படுத்தும் வகையில் திருப்பூா் மாவட்டத்தில் 25 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன என்றாா்.
இதைத்தொடா்ந்து ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்ரமணியன் பேசியதாவது:-
ஏ.இ.பி.சி., மற்றும் பி.எஸ்.எல்., இணைந்து டெல்லி, பெங்களூரு, திருப்பூர், மும்பை, குர்ஹாம் மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களில் மே 5 முதல் 27-ந் தேதி வரை சுற்றுச்சூழல் மாசடையாமல் ஆடை ஏற்றுமதி மற்றும் உற்பத்தியை பெருக்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
புவி மாசுபடாத ஆடைகள் தயாரிப்பில் திருப்பூர் நகரை முதலிடத்தில் கொண்டு வருவதற்கான முயற்சியில் இந்த ஆலோசனை கூட்டம் நடக்கிறது. திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் நோக்கமே 2025-26ம் ஆண்டுக்குள் திருப்பூரில் உற்பத்தியாகும் ஆடைகள் அனைத்தும் பசுமை ஆடைகளாக தயாரிப்பதற்கான வழிமுறைகளில் ஈடுபட்டுள்ளோம்.
திருப்பூர் மாநகரில் மொத்தமாக சூரிய ஒளி மின் சக்தி மற்றும் காற்றாலை மின்சக்தி மூலம் 1,650 மெகாவாட் மின் உற்பத்தியை தயார்படுத்தி கொண்டுள்ளோம். இதில், மாவட்ட அளவில் உள்ள தொழிற்சாலைகளுக்கு 250 மெகாவாட் மின் சக்தியே போதுமானது. மீதமுள்ள 650 மெகாவாட்டை நகர பயன்பாட்டிற்காக அளித்து வருகிறோம்.
உலக அளவில் உள்ள வர்த்தகர்களுக்கு திருப்பூரின் பசுமை திட்டம் குறித்து முழுமையாக தெரிவதில்லை. அதனை முன்னிறுத்தி பல்வேறு நாடுகளுக்கு திருப்பூரின் ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியின் தனித்துவ தன்மையை காட்டுவதற்கே இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இவ்வாறு சுப்ரமணியன் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்