search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பத்திரப்பதிவு செய்ய வக்கீல்களை மட்டும் அனுமதிக்க சட்டம் இயற்ற வேண்டும் - அகில இந்திய வக்கீல்கள் சங்கம் வலியுறுத்தல்
    X

    கோப்புபடம்.

    பத்திரப்பதிவு செய்ய வக்கீல்களை மட்டும் அனுமதிக்க சட்டம் இயற்ற வேண்டும் - அகில இந்திய வக்கீல்கள் சங்கம் வலியுறுத்தல்

    • மாநில செயல் தலைவர் கோதண்டம், வக்கீல்களும் பார் கவுன்சிலும் என்ற தலைப்பில் பேசினார்.
    • பத்திரப்பதிவு செய்ய வக்கீல்கள் மட்டும் அனுமதிக்க சட்டம் இயற்ற வேண்டும்.

    திருப்பூர்:

    அகில இந்திய வக்கீல்கள் சங்க திருப்பூர் மாவட்ட நான்காவது மாநாடு திருப்பூரில் நடந்தது. மாவட்ட தலைவர் மோகன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் மணவாளன் வரவேற்றார்.மாநாட்டை மாநில பொது செயலாளர் முத்து அமுதநாதன் துவக்கி வைத்தார். செயலாளர் பொன்ராம் வேலை அறிக்கையையும், மாவட்ட பொருளாளர் வரதராஜ் வரவு செலவு அறிக்கையும் வாசித்தனர். மாநில செயல் தலைவர் கோதண்டம், வக்கீல்களும் பார் கவுன்சிலும் என்ற தலைப்பில் பேசினார்.

    மாநாட்டில் அகில இந்திய பார் கவுன்சில் வக்கீல்களுக்கான சேம நல நிதியை 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். மாநில அரசு, தமிழ்நாடு பார் கவுன்சில் வக்கீல்களுக்கு சேம நல நிதியை 10 லட்சமாக உயர்த்தியதை உடனடியாக நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும்.5 லட்சம் ரூபாய் நிரந்தர மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும். பத்திரப்பதிவு செய்ய வக்கீல்கள் மட்டும் அனுமதிக்க சட்டம் இயற்ற வேண்டும்.

    பிறப்பு இறப்பு சான்று தொடர்பான வழக்குகள், வாடகை ஒப்பந்தம் தொடர்பான வழக்குகள், குழந்தைகள் தத்து கொடுப்பது தொடர்பான வழக்குகள் போன்றவற்றை கோர்ட்டில் தாக்கல் செய்து நடத்தும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும்.

    திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் அனைத்து வசதிகளுடன் வக்கீல்களுக்கு அறைகள் கட்ட இடம் ஒதுக்கி அதற்கான நிதியை தமிழக அரசு ஒதுக்க வேண்டும். அனைத்து வக்கீல்கள் பயன்படுத்தும் வகையில் டிஜிட்டல் நூலகம், தபால் அலுவலகம், வங்கி, கூட்டுறவு சங்கம் அமைக்க வேண்டும்.தமிழக வக்கீல்கள் பாதுகாப்பு சட்டம் அமல்படுத்த வேண்டும். திருப்பூர் மாவட்ட கோர்ட்டு குறிப்பிட்ட கால இடைவெளியில் பெஞ்ச், பார் கூட்டம் நடத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. சங்க மாவட்ட தலைவராக சுப்பராயன், துணைத்தலைவர்களாக கண்ணன், சேகர், தமயந்தி, கோபாலகிருஷ்ணன், மாவட்ட செயலாளர்களாக மோகன், துணை செயலாளர்களாக பொன்ராம், நவீன், வினோத்குமார், கவுரி மற்றும் 7 கமிட்டி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

    Next Story
    ×