என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![திருப்பூரில் பெரியார், அண்ணா பிறந்தநாளை முன்னிட்டுபேச்சுப்போட்டியில் மாணவர்கள் அசத்தல் திருப்பூரில் பெரியார், அண்ணா பிறந்தநாளை முன்னிட்டுபேச்சுப்போட்டியில் மாணவர்கள் அசத்தல்](https://media.maalaimalar.com/h-upload/2023/11/17/1983075-speech.webp)
திருப்பூரில் பெரியார், அண்ணா பிறந்தநாளை முன்னிட்டுபேச்சுப்போட்டியில் மாணவர்கள் அசத்தல்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- தீபிகாஸ்ரீ 2-வது பரிசும், காங்கயம் அரசு கல்லூரி மாணவர் ஜெயசூர்யா 3-வது பரிசும் பெற தேர்வானார்கள்.
- திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரி மாணவி செண்பகம் 3-வது பரிசும் பெற தேர்வு செய்யப்பட்டனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பெரியார், பேரறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பேச்சுப்போட்டிகள் நடந்தது.இதில் நடந்த பேரறிஞர் அண்ணா பேச்சுப்போட்டியில் பள்ளி மாணவர்கள் பிரிவில் வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் பரங்கிரி முதல் பரிசும், பெருமாநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவன் ரூபன் 2-வது பரிசும், திருப்பூர் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி மாணவி வினித்தா 3-வது பரிசும், அய்யன்காளி பாளையம் வி.கே.அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ரேணுகா மற்றும் குமார்நகர் மாநகராட்சி பள்ளி மாணவி பானுப்பிரியா ஆகியோர் சிறப்பு பரிசும் பெற தேர்வு பெற்றனர். கல்லூரி மாணவர்கள் பிரிவில் தாராபுரம் அரசு கல்லூரி மாணவர் பிரவீன் முதல் பரிசும், மாணவி தீபிகாஸ்ரீ 2-வது பரிசும், காங்கயம் அரசு கல்லூரி மாணவர் ஜெயசூர்யா 3-வது பரிசும் பெற தேர்வானார்கள்.
பின்னர் நடந்த பெரியார் பேச்சுப்போட்டியில் பள்ளி மாணவர்கள் பிரிவில் திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி மவுனிகா முதல் பரிசும், வேலம்பாளையம் ஜெய்சாரதா மேல்நிலைப்பள்ளி மாணவி ஜிஷப்பிரியா 2-வது பரிசும், பெருமாநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவன் அன்பரசு 3-வது பரிசும், விஜயாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் முகமது அஜிம், ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி இந்துஜா ஆகியோர் சிறப்பு பரிசும் பெற தேர்வானார்கள்.
கல்லூரி மாணவர்கள் பிரிவில் பல்லடம் புரட்சித்தலைவி அம்மா அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவி காயத்திரி முதல் பரிசும், தாராபுரம் அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர் கவுதமன் 2-வது பரிசும், திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரி மாணவி செண்பகம் 3-வது பரிசும் பெற தேர்வு செய்யப்பட்டனர்.