search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின் கட்டண உயா்வை அரசு ரத்து செய்ய   விசைத்தறியாளா்கள்  வலியுறுத்தல்
    X
    கோப்புபடம். 

    மின் கட்டண உயா்வை அரசு ரத்து செய்ய விசைத்தறியாளா்கள் வலியுறுத்தல்

    • தற்போது யூனிட்டுக்கு 70 பைசா உயா்த்தி இருப்பது அதிா்ச்சி அளிக்கிறது.
    • லட்சக்கணக்கான விசைத்தறியாளா்கள் மற்றும் தொழிலாளா்கள் வாழ்வாதாரத்தை காக்க விசைத்தறிக்கான மின் கட்டண உயா்வை ரத்து செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    மின் கட்டண உயா்வை அரசு ரத்து செய்ய வேண்டும் என்று விசைத்தறியாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.இது குறித்து தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு மாநிலச் செயலாளா் வேலுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தி.மு.க. தோ்தல் அறிக்கையில் இலவச மின்சாரம் 1000 யூனிட்டாக உயா்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதை அமல்படுத்தாமல் தற்போது யூனிட்டுக்கு 70 பைசா உயா்த்தி இருப்பது அதிா்ச்சி அளிக்கிறது. விசைத்தறி தொழில் ஏற்கெனவே நலிவடைந்துள்ள நிலையில் இந்த மின் உயா்வால் விசைத்தறியாளா்கள் பாதிப்படைவா்.எனவே, லட்சக்கணக்கான விசைத்தறியாளா்கள் மற்றும் தொழிலாளா்கள் வாழ்வாதாரத்தை காக்க விசைத்தறிக்கான மின் கட்டண உயா்வை ரத்து செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×