search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தைப்பூச சிறப்பு ரெயில் -  நேர அட்டவணை வெளியீடு
    X

    கோப்புபடம். 

    தைப்பூச சிறப்பு ரெயில் - நேர அட்டவணை வெளியீடு

    • போத்தனூர் ஜங்ஷனுக்கு 5:08 மணிக்கு வரும் ரெயில் 5:10 மணிக்கும், கோவை ஜங்ஷனுக்கு 5:30 மணிக்கு சென்றடைகிறது.
    • திண்டுக்கல்லில் இருந்து கோவைக்கு முன்பதிவு இல்லாத எக்ஸ்பிரஸ் சிறப்பு ெரயில் (எண்: 06078) மதியம் 2 மணிக்கு புறப்படுகிறது.

    உடுமலை:

    பழனி கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பயணிகள் கூட்டத்தை சமாளிக்க கோவை - திண்டுக்கல் இடையே சிறப்பு ெரயில்கள் இயக்கப்படுகின்றன.

    கோவை - திண்டுக்கல் இடையே முன்பதிவு இல்லாத எக்ஸ்பிரஸ் சிறப்பு ெரயில் (எண்: 06077) வருகிற 4, 5, 6 ஆகிய தேதிகளில் திண்டுக்கல் வரை இயக்கப்படுகிறது.

    இந்த ெரயில் கோவையில் இருந்து காலை 9:20 மணிக்கு புறப்படுகிறது. போத்தனூருக்கு 9:31க்கு வந்து 9:32 மணிக்கு புறப்படுகிறது. கிணத்துக்கடவுக்கு 9:52க்கு வந்து, 9:53 மணிக்கு புறப்படுகிறது.பொள்ளாச்சிக்கு 10:13 மணிக்கு வந்து 10:15 மணிக்கும், கோமங்கலத்துக்கு 10:46க்கு வந்து 10:47 மணிக்கு புறப்படுகிறது.

    உடுமலைக்கு 11 மணிக்கு வந்து 11:01 மணிக்கும்,மைவாடி ரோடுக்கு 11:09 மணிக்கு வந்து 11:10 மணிக்கும் புறப்படுகிறது. மடத்துக்குளத்துக்கு 11:14 மணிக்கு வந்து, 11:15 மணிக்கு புறப்படுகிறது. அதன்பின் திண்டுக்கல்லுக்கு, 1 மணிக்கு சென்றடைகிறது.திண்டுக்கல்லில் இருந்து கோவைக்கு முன்பதிவு இல்லாத எக்ஸ்பிரஸ் சிறப்பு ெரயில் (எண்: 06078) மதியம் 2 மணிக்கு புறப்படுகிறது. அங்கு இருந்து மடத்துக்குளத்துக்கு 3:18 மணிக்கு வந்து 3:19க்கும், மைவாடி ரோடு சந்திப்புக்கு 3:24 மணிக்கு வந்து 3:25 மணிக்கும்,உடுமலைக்கு 3:33 மணிக்கு வந்து 3:34 மணிக்கும் புறப்படுகிறது.

    கோமங்கலத்துக்கு 3:47 மணிக்கு வந்து 3:48 மணிக்கும்,பொள்ளாச்சி ஜங்ஷனுக்கு 4:18க்கு வந்து 4:20 மணிக்கு புறப்படுகிறது.கிணத்துக்கடவுக்கு 4:43க்கு வந்து 4:44 மணிக்கும், போத்தனூர் ஜங்ஷனுக்கு 5:08 மணிக்கு வரும் ரெயில் 5:10 மணிக்கும், கோவை ஜங்ஷனுக்கு 5:30 மணிக்கு சென்றடைகிறது.இதற்கான நேர அட்டவணையை தெற்கு ெரயில்வே வெளியிட்டுள்ளது.

    Next Story
    ×