search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பால் கொள்முதல் விலையை உயர்த்த உற்பத்தியாளர்கள் கோரிக்கை
    X

    கோப்புபடம். 

    பால் கொள்முதல் விலையை உயர்த்த உற்பத்தியாளர்கள் கோரிக்கை

    • கொள்முதல் விலை, 2019ம் ஆண்டுக்கு பின்பு உயர்த்தப்படவில்லை.
    • பால் கூட்டுறவு சங்கங்களுக்கு காலமுறைப்படி கால்நடை மருத்துவர்கள் வருவதில்லை.

    அவிநாசி:

    தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட பேரவை கூட்டம் அவிநாசியில் நடந்தது.தமிழ்நாடு விவசாயிகள் சங்க அவிநாசி ஒன்றிய தலைவர் முத்துரத்தினம் வரவேற்றார். வேலுச்சாமி தலைமை வகித்தார். இதில் மாவட்ட தலைவராக கொளந்தசாமி, செயலாளராக வேலுச்சாமி, பொருளாளராக பரமசிவம், துணை தலைவராக குமாரசாமி, துணை செயலாளராக சுப்பிரமணி உட்பட, 11 பேர் கொண்ட கமிட்டி தேர்வு செய்யப்பட்டது.

    கூட்டத்தில்பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலை, 2019ம் ஆண்டுக்கு பின்பு உயர்த்தப்படவில்லை. தற்போது தவிடு, புண்ணாக்கு, பருத்திக்கொட்டை, கலப்புத் தீவனம் உள்ளிட்ட இடுபொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.சோளத்தட்டை, பசுந்தீவன உற்பத்தி செலவும் அதிகரித்துள்ளதால் பசும் பாலுக்கு லிட்டருக்கு 42 ரூபாய், எருமைப் பாலுக்கு 51 ரூபாய் கொள்முதல் விலையாக அரசு உயர்த்தி வழங்க வேண்டும்.

    ஆவின் நிர்வாகம் போதியளவு மருத்துவர்களை நியமிக்காததால் பால் கூட்டுறவு சங்கங்களுக்கு காலமுறைப்படி கால்நடை மருத்துவர்கள் வருவதில்லை. கால்நடைகளுக்கு நோய் தாக்கும் போது, தனியார் மருத்துவர்களை நாடி, அதிக தொகை செலவழிக்க வேண்டியுள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.திருப்பூர் மாவட்ட ஆவின் ஒன்றியத்திற்கு தேவையான உட்கட்டமைப்பு வசதி செய்து தர வேண்டும் எனதீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    Next Story
    ×