என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வளர்ச்சிப்பணிகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் கண்காணிப்பு அலுவலர் ஆலோசனை
- மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) விஜயராஜ், (வளர்ச்சி) வாணி மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- மக்கள் குறை கேட்பு முகாம் மூலம் பெறப்படும் தகுதி வாய்ந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
திருப்பூர்:
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அரசு சிறப்பு செயலர்-திருப்பூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் டாக்டர்.எம்.கருணாகரன் தலைமையில் கலெக்டர் வினீத் முன்னிலையில் திருப்பூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம்நடைபெற்றது.
அப்போது திருப்பூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கருணாகரன் தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலுக்கிணங்க தமிழ்நாடு அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு நேரிடையாக சென்றடைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமை நடைபெறும் மக்கள் குறை கேட்பு முகாம் மூலம் பெறப்படும் தகுதி வாய்ந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். திருப்பூர் மாநகராட்சியில் நடைபெற்று வரும் சீர்மிகு நகரத் திட்ட பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, பட்டு வளர்ச்சித்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மீன் வளத்துறை, பால் வளத்துறை, கூட்டுறவுதுறை, பொது சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை, நெடுஞ்சாலைத்துறை, மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், மாவட்ட தொழில் மையம், தொழிலாளர் நல வாரியம், மாநகராட்சி, நகராட்சி நிர்வாகத்துறை மற்றும் பேரூராட்சிகள் ஆகிய துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் தங்கள் துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்களை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்றார்.
கூட்டத்தில், திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி , மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் , மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) விஜயராஜ், (வளர்ச்சி) வாணி மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்