என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
போக்குவரத்து அபராதம் குறித்து விளம்பர பதாகைகள் வைத்து போலீசார் விழிப்புணர்வு
- தமிழக அரசு போக்குவரத்து விதிமுறைகளில் பல்வேறு மாற்றங்களை அமல்படுத்தி, அபராத கட்டணத்தை உயர்த்தி உள்ளது.
- அரசு கொண்டுவந்த புதிய போக்குவரத்து விதிமுறைகளை தொடர்ந்து பல்லடம் பகுதியில் தினசரிசுமார் 25 ஆயிரம் ரூபாய் அபராதமாக விதிக்கப்படுகிறது.
பல்லடம்:
பொது மக்கள் சாலைகளில் தங்களது இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்கையில் ஹெல்மட் அணிந்து செல்ல வேண்டும், குடிபோதையில் வாகனங்களை ஓட்டக்கூடாது, காரில் செல்கையில் சீட் பெல்ட் அணிந்து ஓட்டவேண்டும், போக்குவரத்து சிக்னலில் சிவப்பு விளக்கு எரியும்போது செல்லக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து விதிமுறைகள் உள்ளன. இருந்தும் அவற்றை பின்பற்றாமல் சிலர் செய்யும் விதி மீறல்களால் பெரும் விபத்துக்கள் ஏற்பட்டு விலை மதிப்பில்லாத மனித உயிர்கள் பலியாகின்றன .
இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு போக்குவரத்து விதிமுறைகளில் பல்வேறு மாற்றங்களை அமல்படுத்தி, அபராத கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இது குறித்து பல்லடத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோருக்கு அபராதம் குறித்து விளம்பர பதாகைகள் வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.இது குறித்து போக்குவரத்து இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு கூறியதாவது:-
தமிழக அரசு போக்குவரத்து விதிமுறைகளில் பல்வேறு மாற்றங்களை அமல்படுத்தி, அபராத கட்டணத்தை உயர்த்தி உள்ளது.அந்த வகையில் குடிபோதையில் வாகனம் ஓட்டினால் பத்தாயிரம் ரூபாய், ஹெல்மெட் காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்றால் ஆயிரம் ரூபாய், உள்ளிட்ட பல்வேறு அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன.
அரசு கொண்டுவந்த புதிய போக்குவரத்து விதிமுறைகளை தொடர்ந்து பல்லடம் பகுதியில் தினசரிசுமார் 25 ஆயிரம் ரூபாய் அபராதமாக விதிக்கப்படுகிறது. குறிப்பாக ஹெல்மட் அணியாமல் வந்து அபராதம் செலுத்துவோர் அதிக அளவில் உள்ளனர். எனவே ஹெல்மெட் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டி,பல்லடத்தில் ஆங்காங்கே விளம்பர பதாகைகள் வைத்துள்ளோம். பொதுமக்கள் அரசின் போக்குவரத்து விதிகளை பின்பற்றி, தங்களது விலைமதிப்பில்லாத உயிரை காப்பாற்றிக்கொள்ளவும் அபராதங்களை தவிர்க்கவும் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்