என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![பள்ளி மாணவர்களின் கல்வித்தரத்தை மதிப்பீடு செய்ய வினாடி - வினா தேர்வு பள்ளி மாணவர்களின் கல்வித்தரத்தை மதிப்பீடு செய்ய வினாடி - வினா தேர்வு](https://media.maalaimalar.com/h-upload/2023/02/19/1838123-quiz.webp)
கோப்புபடம்.
பள்ளி மாணவர்களின் கல்வித்தரத்தை மதிப்பீடு செய்ய வினாடி - வினா தேர்வு
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- முதுநிலை விரிவுரையாளர் சுப்ரமணியம் ஆகியோர் வினாடிவினா தேர்வு, விடைத்தாள் தயாரிப்பு குறித்து பயிற்சிகளை வழங்கினர்.
- மாவட்டத்தில் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 179 ஆசிரியர்கள் பயிற்சியில் பங்கேற்றனர்.
திருப்பூர்:
பள்ளி கல்வித்துறை மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் 6முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கல்வித்தரம் குறித்து மதிப்பீடு செய்ய கம்ப்யூட்டர் வழியில் வினாடி வினா தேர்வு வாரம்தோறும் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
தேர்வுக்கான வினாத்தாள் தயாரிப்பு தொடர்பான பயிற்சி மற்றும் ஆலோசனை கூட்டம் என்.சி.பி., மேல்நிலைப்பள்ளி தாராபுரம், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, உடுமலை, பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அவிநாசி ஆகிய மையங்களில் நடந்தது. திருப்பூர் குமார்நகர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில், முதுநிலை விரிவுரையாளர் பாபி இந்திரா, கே.எஸ்.சி., அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதுநிலை விரிவுரையாளர் சுப்ரமணியம் ஆகியோர் வினாடிவினா தேர்வு, விடைத்தாள் தயாரிப்பு குறித்து பயிற்சிகளை வழங்கினர்.
மாவட்டத்தில் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 179 ஆசிரியர்கள் பயிற்சியில் பங்கேற்றனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி, மாவட்ட கல்வி அலுவலர் பக்தவச்சலம், மாநில கல்வியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் முதல்வர் சங்கர் ஆகியோர் பயிற்சி நடக்கும் மையங்களில் ஆய்வு செய்தனர்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி கூறுகையில், வருகிற 20ந் தேதி முதல் பள்ளி அளவில், 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு வினாடி - வினா தேர்வு நடத்தப்படும். நடுநிலைப்பள்ளி மாணவரின் கல்வித்தரத்தை மேம்படுத்த தேவையான முயற்சிகள் பள்ளிகல்வித்துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.