என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்வி உபகரணங்கள் வாங்க கடைகளில் குவியும் மாணவர்கள்
    X

    கோப்புபடம். 

    கல்வி உபகரணங்கள் வாங்க கடைகளில் குவியும் மாணவர்கள்

    • தமிழகம் முழுவதும் கடுமையான வெயில் நிலவி வருவதால் பள்ளிகள் திறப்பு தள்ளி போடப்பட்டிருந்தது.
    • வளையல், கம்மல் உள்ளிட்ட அலங்கார பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடைகளில் மாணவிகள் அதிக அளவில் செல்கின்றனர்.

    திருப்பூர்:

    தமிழகம் முழுவதும் கடுமையான வெயில் நிலவி வருவதால் பள்ளிகள் திறப்பு தள்ளி போடப்பட்டிருந்தது. தற்போது 6 முதல் பிளஸ்-2 வரைக்கும் நாளையும்(திங்கட்கிழமை), 1 முதல் 5-ம் வகுப்பு வரைக்கும் வருகிற 14-ந்தேதியும்(வியாழக்கிழமை) பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதனால் பள்ளி செல்வதற்கு தேவையான புத்தகப்பை, நோட்டுகள், உள்ளிட்ட பல்வேறு வகையான கல்வி உபகரணங்களை வாங்குவதற்கு திருப்பூரில் கடைகளுக்கு பொதுமக்கள் சென்றவண்ணம் உள்ளனர். இந்த பொருட்கள் விற்பனை செய்யப்படும் பெரியகடை வீதி உள்பட மாநகரின் பல கடைகளில் நேற்று மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    இதேபோல் பள்ளிகளின் சீருடைகளை தைப்பதற்காக சிலர் தையல் கடைகளுக்கு செல்கின்றனர். சிலர் ரெடிமேடாக விற்பனை செய்யப்படும் சீருடைகளை வாங்கி செல்கின்றனர். இதனால் துணிக்கடைகளிலும், தையல் கடைகளிலும் கூட்டம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

    இதேபோல், புது ஷூ மற்றும் காலனிகள் வாங்குவதற்காகவும் காலனி கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. மேலும், வளையல், கம்மல் உள்ளிட்ட அலங்கார பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடைகளில் மாணவிகள் அதிக அளவில் செல்கின்றனர்.

    பள்ளி திறப்பையொட்டி திருப்பூர் மாநகராட்சி பகுதியில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் தூய்மைப்பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. பள்ளிகளின் வகுப்பறைகள் சுத்தம் செய்தல், மேஜை, இருக்கைகள் சுத்தம் செய்தல், கழிப்பிடங்கள், சுற்றுப்புற வளாகம், கரும்பலகைகளுக்கு வர்ணம் பூசுதல், மின் இணைப்பு சரி செய்தல், குடிநீர் தொட்டிகள் தூய்மை செய்தல், கதவு-ஜன்னல்கள் சரி செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த பணிகளை பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் மேற்பார்வையிட்டனர்.

    Next Story
    ×