search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளிகளில் இந்த மாதம் சிட்டுக்குருவியை மையமாக வைத்து   எடுக்கப்பட்ட திரைப்படம் திரையீடு
    X

    கோப்புபடம்.

    பள்ளிகளில் இந்த மாதம் சிட்டுக்குருவியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் திரையீடு

    • 2008ல் தேசிய விருது பெற்ற கன்னட திரைப்படம் குப்பாச்சிகலு இம்மாதம் திரையிட உத்தரவிடப்பட்டுள்ளது.
    • குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான படங்கள் மாதந்தோறும் பள்ளிகளில் திரையிடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    திருப்பூர்:

    பள்ளிகளில் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மாதந்தோறும் தேசிய, சர்வதேச விருது பெற்ற, திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. இப்படங்கள் பார்ப்பதன் வாயிலாக மாணவர்களின் கற்பனைத்திறனுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.படம் முடிந்ததும், மாணவர்களின் பின்னோட்டம் பெறப்படும். கதைக்களம், கதாநாயகர்கள், கதைக்கரு, தொழில்நுட்ப யுக்திகள் குறித்து ஆசிரியர்களுடன் மாணவர்கள் விவாதிக்க வேண்டும்.

    2008ல் தேசிய விருது பெற்ற கன்னட திரைப்படம் குப்பாச்சிகலு இம்மாதம் திரையிட உத்தரவிடப்பட்டுள்ளது.பெரும்பாலான பள்ளிகளில் இத்திரைப்படம் குழந்தைகள் தினம் முதல் திரையிடப்பட்டு வருகிறது. மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பகுதி வாரியாக பிரித்து இந்த வார இறுதி வரை திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.காணாமல் போன சிட்டுக்குருவியை, இரு குழந்தைகள் தேடும் போது அவர்களின் பயணத்தில் சந்தித்த மனிதர்கள், சம்பவங்கள், அனுபவங்கள் குறித்து இப்படம் விளக்குவதாக உள்ளது.குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான படங்கள் மாதந்தோறும் பள்ளிகளில் திரையிடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×