search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம்85 ஆயிரம் பேருக்கு   வேலை வாய்ப்பு அமைச்சர் தகவல்
    X

    விழாவில் ஒரு பெண்ணுக்கு நலத்திட்ட உதவியை அமைச்சர்கள் மு.பெ.சாமிநான், சி.வி.கணேசன் ஆகியோர் வழங்கிய போது எடுத்தபடம். அருகில் அமைச்சர் கயல்விழிசெல்வராஜ் மற்றும் பலர் உள்ளனர்.

    தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம்85 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு அமைச்சர் தகவல்

    • 5 பேருக்கு வாரிசு அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
    • வேலைவாய்ப்பு முகாமை படித்த இளைஞர்கள் பயன்பெறும் வகையில் சிறப்பாக நடத்திட வேண்டும்.

    காங்கயம்:

    காங்கயம் கரூர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் குறித்தான கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் தலைமை தாங்கினார். ஈரோடு தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி வீரராக வராவ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

    இதில் தொழிலாளர் நலத்துறை சார்பில் 42 பயனாளிகளுக்கு ரூ.7 லட்சத்து 43 ஆயிரத்து 500 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளையும், பல்லடம் வட்டம் மின்வாரியத் துறை சார்பில் 5 பேருக்கு வாரிசு அடிப்படையில் பணி நியமன ஆணையும் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்துவது குறித்து முதல் நிலை கூட்டம் நடைபெற்றது.

    அமைச்சர் சி.வி.கணேசன் பேசுகையில், தமிழக முதல்-அமைச்சரின் ஆணைக்கிணங்க இந்த ஓராண்டு காலத்தில் ஒவ்வொரு வேலைவாய்ப்பு முகாமிலும் 72 ஆயிரம் பேர் கலந்து கொண்டு 8,782 பேர் வேலை வாய்ப்பை பெற்றனர். இதுவரையில் தமிழகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு 85 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர். அனைத்து துறைகளும் ஆயத்தப் பணிகளை துரிதமாக செய்ய வேண்டும். அந்த வகையில் நடைபெறவுள்ள மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாமை படித்த இளைஞர்கள் பயன்பெறும் வகையில் சிறப்பாக நடத்திட வேண்டும் என தெரிவித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் தொழிலாளர் ஆணையர் எஸ்.பொன்னுசாமி, தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் ஏ.ராஜ்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×