என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருப்பூர் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் மூலம் 3.82 லட்சம் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன - அதிகாரி தகவல்
- பிற மருத்துவ அவசர தேவைக்காக 2 லட்சத்து 15 ஆயிரத்து 233 பேரும், 108 ஆம்புலன்ைஸ அழைத்து பயன்படுத்தி உள்ளனர்.
- 24 மணி நேரமும், தேவையான உதவிகளை செய்து தர ஆம்புலன்ஸ் பைலட், டெக்னீசியன் தயாராக உள்ளனர்.
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில், 108 ஆம்புலன்ஸ் சேவை 2008ல் துவங்கப்பட்டது. துவக்கத்தில் 15 ஆம்புலன்ஸ்கள் மட்டும் இருந்தன. தற்போது 25 உயிர் காக்கும் வாகனம், 3 அதிநவீன உடனடி உயிர் பாதுகாப்பு கருவிகள் கொண்ட வாகனம், பிறந்தது முதல் 5 வயதுடைய குழந்தைகளுக்கு இரண்டு ஆம்புலன்ஸ், ஒரு பைக் ஆம்புலன்ஸ் என மொத்தம் 31 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்படுகின்றன.
ஆம்புலன்ஸ் சேவை துவங்கியது முதல் கடந்த செப்டம்பர் 30-ந் தேதி வரை 3 லட்சத்து 82 ஆயிரத்து, 550 பேர் ஆம்புலன்ைஸ அழைத்து பயன்பெற்றுள்ளனர்.
பிரசவத்துக்காக 75 ஆயிரத்து 296 பேரும், சாலை விபத்துக்காக 92 ஆயிரத்து, 21 பேரும், பிற மருத்துவ அவசர தேவைக்காக 2 லட்சத்து 15 ஆயிரத்து 233 பேரும், 108 ஆம்புலன்ைஸ அழைத்து பயன்படுத்தி உள்ளனர்.
இது குறித்து திருப்பூர் மாவட்ட 108 ஆம்புலன்ஸ் மேலாளர் உதயநிதி கூறியதாவது:- 24 மணி நேரமும், தேவையான உதவிகளை செய்து தர ஆம்புலன்ஸ் பைலட், டெக்னீசியன் தயாராக உள்ளனர்.
நள்ளிரவு, அதிகாலை நேரத்தில் தேவையான அவசர, பிரசவ உதவிகளை, கண்விழித்து தங்களால் இயன்றவரை பணியாற்றி வருகிறோம். அதன் வாயிலாக, 13 ஆண்டுகளில், 3.82 லட்சம் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. விபத்துக்கு அடுத்தப்படியாக பிரசவத்துக்கு 108 ஆம்புலன்சை அதிகளவில் மக்கள் தேடுகின்றனர். காரணம், அருகில் உள்ள மருத்துவமனைக்கு விரைந்து கொண்டு சேர்ப்பது, வரும் வழியில் தேவையான சிகிச்சை வழங்குவது உள்ளிட்ட காரணங்கள் தான்.
அவ்வகையில் திருப்பூர் மாவட்டத்தில் ஆம்புலன்சில் 361 குழந்தைகள் பிறந்துள்ளன. ஆம்புலன்ஸ் டிரைவர், உதவியாளர் வாயிலாக வீடுகளில் 535 குழந்தைகள் பிறந்துள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.