என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருப்பூர் மாவட்டத்தில் வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்தும் மருத்துவ முகாம் - கலெக்டர் தொடங்கி வைத்தார்
- வயிற்றுப்போக்கு உள்ள குழந்தைகளுக்கு உப்புசர்க்கரை கரைசல் பொட்டலங்களுடன் துத்தநாக மாத்திரைகளும் வழங்கப்பட உள்ளது.
- பொதுமக்கள் இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, தங்களது குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடுகளை களைந்து, ஆரோக்கியத்தை மேம்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் தீவிர வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்தும் இரு வார முகாமினை கலெக்டர் வினீத் துவக்கி வைத்து குழந்தைகளுக்கு உப்புசர்க்கரை கரைசல் பொட்டலங்களுடன் துத்தநாக மாத்திரைகளை வழங்கினார். இது குறித்து கலெக்டர் கூறியதாவது :-
தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் சார்பாக 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கினால் ஏற்படும் இறப்பை தடுக்க, தீவிர வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்தும் இரு வார முகாம் திருப்பூர் மாவட்டத்தில் 18.7.2022 முதல் 30-7-2022 வரை நடைபெற உள்ளது. இத்திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 5 வயதிற்குட்பட்ட சுமார் 2,21,689. குழந்தைகளுக்கு உப்பு சர்க்கரைக் கரைசல் பொட்டலங்கள் மற்றும் வயிற்றுப்போக்கு உள்ள குழந்தைகளுக்கு உப்புசர்க்கரை கரைசல் பொட்டலங்களுடன் துத்தநாக மாத்திரைகளும் வழங்கப்பட உள்ளது.
இந்த இரு வாரங்களில் அனைத்து அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும் வயிற்றுப்போக்கினை தடுக்கும் மற்றும் சிகிச்சை முறை பற்றியும், கைகழுவும் முறை மற்றும் அதன் அவசியத்தைப் பற்றியும், 6 மாதத்திற்குட்பட்ட குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுப்பதன் அவசியத்தைப் பற்றியும் உப்புசர்க்கரை கரைசல் தயாரிக்கும் மற்றும் பயன்படுத்தும் முறை பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
ஓ.ஆர்.எஸ்.மற்றும் துத்தநாக மாத்திரையினால் எந்தவிதமான பக்க விளைவுகளும் ஏற்படாது. பொதுமக்கள் இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, தங்களது குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடுகளை களைந்து, ஆரோக்கியத்தை மேம்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில்,துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) ஜெகதீஷ்குமார், உதவி இயக்குநர் ((எஸ்.பி.எச்.ஐ.) கோவிந்தராஜ், உதவி திட்ட மேலாளர் மரு.ஜெயபிரியா, மாவட்ட பயிற்சிக்குழு மருத்துவ அலுவலர் ஸ்ரீனிவாஷ், மாவட்ட தாய் சேய் நல அலுவலர் புனிதா, மற்றும் தொடர்புடைய துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்