என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.
போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த பல்லடத்தில் மேம்பாலம் அமைக்க கோரிக்கை

- போக்குவரத்து பாதிப்பதால் ஒரேகட்டமாக பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மேம்பாலம் கட்டும் பணிக்கான அனுமதியை பெற்று விரைவில் பணிகளை முடிக்க வேண்டும்.
திருப்பூர்:
திருப்பூா் கோட்டம் நெடுஞ்சாலைத் துறை சாா்பில், குறைகேட்புக் கூட்டம் திருப்பூா் கோட்ட பொறியாளா் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் பல்லடம் தாலுகா நுகா்வோா் விழிப்புணா்வு இயக்க தலைவா் மணிக்குமாா் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
பல்லடம் நகரப்பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் பனப்பாளையம் முதல் அண்ணா நகா் வரை தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்த வேண்டும். மேம்பாலம் கட்டும் பணிக்கான அனுமதியை பெற்று விரைவில் பணிகளை முடிக்க வேண்டும். பேருந்து நிலையம் எதிரிலும் அரசு மருத்துவமனை பகுதியிலும் சாலையை கடந்து செல்லும்போது அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இப்பகுதிகளில் சுரங்க நடைபாதை அமைக்க வேண்டும்.
பல்லடம் - தாராபுரம் சாலை குண்டடம் வழியாக, மாநில நெடுஞ்சாலை 30 கி.மீ. அளவுக்கு, நான்கு வழிப்பாதை திட்டப்பணி நடந்து வருகிறது. முதல்கட்டமாக, புத்தரச்சல் வரை 5 கி.மீ. மட்டுமே பணி நடந்துள்ளது. பணிகள் மந்தமாக நடக்கின்றன. போக்குவரத்து பாதிப்பதால் ஒரேகட்டமாக பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.