என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
உடுமலை நகராட்சி பகுதிகளில் சேதம் அடைந்துள்ள தரைமட்ட பாலங்களை சீரமைக்க கோரிக்கை
- இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி வருகின்றனர்.
- சேதம் அடைந்த தரைமட்ட பாலத்தை சீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உடுமலை:
உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இணைப்பு சாலை சந்திப்பில் தரைமட்ட பாலங்கள் கட்டப்பட்டு உள்ளது. அந்த பாலங்கள் ஆங்காங்கே சேதம் அடைந்தும் வருகின்றது. அவற்றை புதுப்பிக்கும் பணிகள் ஒருபுறம் நடைபெற்று வந்தாலும், ஒரு சில சேதமடைந்த பாலங்கள் மாதக்கணக்கில் சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். அந்த வகையில் நகராட்சி பூங்காவுக்கு அருகே உள்ள ராஜேந்திர ரோடு சந்திப்பில் தரைமட்ட பாலம் சேதம் அடைந்தது. அதை சீரமைப்பதற்கு நிர்வாகத்தின் சார்பில் நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக சேதம் அடைந்த பகுதியை தடுப்பு வைத்து மறைத்து உள்ளனர்.இதனால் இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி வருகின்றனர். இது குறித்து அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே ராஜேந்திரா ரோடு சந்திப்பில் சேதம் அடைந்த தரைமட்ட பாலத்தை சீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.