search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின்சார வசதியின்றி தவிக்கும் உடுமலை மலைவாழ் கிராம மக்கள்
    X
    கோப்புபடம். 

    மின்சார வசதியின்றி தவிக்கும் உடுமலை மலைவாழ் கிராம மக்கள்

    • சில ஆண்டுகளுக்கு பின் சோலார் பேனல்கள் படிப்படியாக பழுதடைந்தன.
    • சில ஆண்டுகளுக்கு பின் சோலார் பேனல்கள் படிப்படியாக பழுதடைந்தன.

    உடுமலை:

    ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை அமராவதி வனச்சரகத்தில் 13 மலைவாழ் குடியிருப்பு பகுதிகள் உள்ளன. தளிஞ்சி, மாவடப்பு ,ஈசல் தட்டு உள்பட குடியிருப்புகளில் தலா 200-க்கும் அதிகமான வீடுகள் உள்ளன .அடர்ந்த வனப்பகுதியில் இருப்பதால் இங்கு உள்ள குடியிருப்புகளுக்கு மின் வசதி இதுவரை அளிக்கப்படவில்லை.சில ஆண்டுகளுக்கு முன்பு தளிஞ்சி உட்பட்ட பகுதிகளுக்கு சூரிய ஒளியில் மின்சாரம் உற்பத்தி செய்து விளக்குகளை பயன்படுத்த தேவையான சோலார் பேனல்கள் அரசால் வழங்கப்பட்டன. இம்முறையில் தெரு விளக்குகளும் வீடுகளுக்கான பேனல்களும் அமைக்கப்பட்டன .நீண்ட கால கோரிக்கை நிறைவேறிய மகிழ்ச்சியில் பகுதி மக்கள் இருந்தனர். இதனால் இருளில் தவித்து வந்த கிராமங்களுக்கு சூரிய ஒளியும் மின்விளக்குகள் சிறிய ஒளி அளித்தது. இந்த பேனல்களை பயன்படுத்தி சில மின்சார பொருள்களையும் அங்குள்ள மக்கள் பயன்படுத்தி வந்தனர் .

    இதன் மூலம் வனவிலங்குவருவதை அறிந்து கொள்ள குடியிருப்புகளுக்கு தெருவிளக்குகள் பயன்பட்டன .இவ்வாறு பல பயன்களை அளித்துவந்த சோலார் பேனல்களை பராமரிப்பது குறித்துஇப் பகுதி மக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவில்லை. சில ஆண்டுகளுக்கு பின் சோலார் பேனல்கள் படிப்படியாக பழுதடைந்தன.

    சரி பார்க்கும் தொழில்நுட்பம் தெரியாததால் பல மலைவாழ் குடியிருப்புகளில் தெரு விளக்குகள் தற்போது எரிவதில்லை. வீடுகளுக்கு வழங்கப்பட்ட பேனல்களும் அடிக்கடி பழுதடைவதால் அப்பகுதி மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

    தெருவிளக்குகளும் காட்சி பொருளாக உள்ளது. மலைவாழ் கிராமங்கள் சிறப்பு திட்டத்தின் கீழ் சோலார் பேனல்களை புதுப்பிக்கவும் மாற்றி அமைக்கவும் மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலைவாழ் கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    Next Story
    ×