என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தற்காலிக ஆசிரியர்கள் தேர்வு பணி தீவிரம்
- தலைமையாசிரியர்கள் வாயிலாக பரிசீலனைக்கு உட்படுத்தப்படுகிறது.
- மதிப்பூதியம் வழங்கப்பட்டதற்கான பற்றொப்பப் பதிவேடு பேணப்படும்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் துவக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் தொகுப்பூதியத்தின் கீழ் நிரப்பப்பட உள்ளன.இதற்காக தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பம் பெறப்பட்டன. அவ்வகையில் 2 ஆயிரத்து 213 பேர் இப்பணிக்காக விண்ணப்பித்துள்ளனர்.
இப்பணிக்கு ஐகோர்ட்டு உத்தரவுப்படி தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக நடத்தப்பட்ட தேர்வுகளில் பங்கேற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் ஒரு காலிப்பணியிடத்துக்கு ஒன்றுக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தால் முன்னுரிமை அடிப்படையில் நியமனம் செய்யப்படவும் உள்ளது.
அதன்படி மாவட்ட கல்வி அலுவலர்களிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்கள் வாயிலாக பரிசீலனைக்கு உட்படுத்தப்படுகிறது. இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
திருப்பூர் மாவட்டத்தில் 86 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களும் 54 பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் பணிடங்களும் காலியாக உள்ளன. இப்பணியிடத்திற்கு டி.டி.எட்., பி.எட்., மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட டிகிரிகளுடன் பி.எட்., மற்றும் எம்.எட்., படித்தவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
இந்த விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் தலைமையாசிரியர், உதவி தலைமையாசிரியர் அல்லது மூத்த ஆசிரியரைக்கொண்ட குழு சரிபார்த்து, தகுதியானவர்களை வகுப்பறையில் டெமோ பாடம் நடத்த அறிவுறுத்தப்படும்.அதன் வாயிலாக அவர்களின் தனித்திறன் கண்டறியப்படுகிறது.
தற்காலிகமாக நியமனம் செய்யப்படும் ஆசிரியர்களுக்கு, தனியாக வருகைப்பதிவேடு மற்றும் மதிப்பூதியம் வழங்கப்பட்டதற்கான பற்றொப்பப் பதிவேடு பேணப்படும்.குறிப்பாகதேர்வுக்குழுவால், தேர்வு செய்யப்பட்ட பட்டியல் விபரம் வருகிற 18ந்தேதி முதன்மை கல்வி அலுவலருக்கு அனுப்பி வைக்கப்படும்.பின் 19-ந்தேதி ஏற்கப்பட்ட தற்காலிக நியமனத்திற்கு பள்ளி மேலாண்மைக் குழுவின் ஒப்புதல் பெறப்படும். 20-ந்தேதி தற்காலிக நியமனம் பெற்றவர் பள்ளியில் சேர்வர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்