என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.
கொச்சுவேலி ரெயில் பங்கரூபேட் நிலையத்தில் நின்று செல்லும் என அறிவிப்பு
- 6 மாதங்களுக்கு பங்கரூபேட் ரெயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்லும் என ரெயில்வே அறிவித்துள்ளது.
- பங்காரூபேட் ரெயில் நிலையத்தில் செப்டம்பர் 1ந் தேதி வரை ஒரு நிமிடம் நின்று செல்லும்.
திருப்பூர் :
கொச்சுவேலியில் இருந்து யஷ்வந்த்பூர் செல்லும் ெரயில் மார்ச் முதல் செப்டம்பர் மாதம் வரை 6 மாதங்களுக்கு பங்கரூபேட் ரெயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்லும் என ெரயில்வே அறிவித்து ள்ளது. கேரள மாநிலம் கொச்சுவேலியில் இருந்து கர்நாடக மாநிலம் யஷ்வந்த்பூ ருக்கு வெள்ளிக்கிழமை தோறும் சிறப்பு ெரயில் (எண்: 22678) இயக்கப்ப டுகிறது. கொல்லம், செங்கனூர், கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணராஜபுரம் ரெயில் நிலையங்களில் நின்று யஷ்வந்த்பூர் செல்கிறது.
இனி சேலம் - கிருஷ்ணராஜபுரம் இடையே உள்ள பங்காரூபேட் ரெயில் நிலையத்தில் செப்டம்பர் 1ந்தேதி வரை ஒரு நிமிடம் நின்று செல்லும். இந்த உத்தரவு மார்ச் முதல் செப்டம்பர் வரை பரீட்சார்த்த முறையில், 6 மாதங்களுக்கு அமலில் இருக்கும். அதேநேரம் யஷ்வந்த்பூரில் இருந்து கொச்சுவேலிக்கு மறுமார்க்கமாக ரெயில் (எண்: 22677) வருகையில் வழக்கமான அட்டவணை ப்படி இயங்கும். பங்கரூபேட்டில் நிற்காது என தெற்கு ெரயில்வே சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






