search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வட்டமலை கரை ஓடை அணைக்கு தண்ணீர் கொண்டு வர அதிகாரிகள் ஆய்வு
    X

    அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட காட்சி.

    வட்டமலை கரை ஓடை அணைக்கு தண்ணீர் கொண்டு வர அதிகாரிகள் ஆய்வு

    • அணையை சுற்றி உள்ள 6 ஆயிரம் ஏக்கர் பூமி பாசனம் பெரும் வகையில் கட்டப்பட்டுள்ளது.
    • கோடை காலம் என்பதால் அணையில் நீர்மட்டம் மிகவும் குறைந்து உள்ளது.

    வெள்ளகோவில் :

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள உத்தமபாளையத்தில் வட்டமலை கரை ஓடை அணை உள்ளது. இந்த அணை 600 ஏக்கர் பரப்பளவில்,27 அடி உயரத்தில், அணையை சுற்றி உள்ள 6 ஆயிரம் ஏக்கர் பூமி பாசனம் பெரும் வகையில் கட்டப்பட்டுள்ளது.

    இந்த அணைக்கு 2021 ம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழக செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நடவடிக்கையின் பேரில் பரம்பி குளம் ஆழியாறு பாசன திட்ட கிளை வாய்க்காலில் இருந்து வடமலைக்கரை ஓடை அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. வடமலைக்கரை ஓடை அணைக்கு நீர் வந்த பிறகு கடந்த ஆண்டு 3 முறை பாசனத்திற்காகவும், கால்நடைகளின் குடிநீருக்காகவும் தண்ணீர் திறந்து விடப்பட்டன.தற்போது கோடை காலம் என்பதால் அணையில் நீர்மட்டம் மிகவும் குறைந்து உள்ளது. வட்ட மலைக்கரை ஓடை அணை க்கு தொடர்ந்து நீர் அமராவதி ஆற்றில் இருந்து கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதையடுத்து அமராவதி ஆற்றில் இருந்து வட்டமலை கரை ஓடை அணைக்கு தண்ணீர் கொண்டு வர நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பொதுப்பணித்துறை உதவி பொறி யாளர் நித்தியா, லக்கமநா யக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பழனிச்சாமி, ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் லோகநாதன், வட்டமலை கரை ஓடை அணை சங்கத் தலைவர் பால பூபதி ஆகியோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×